நெட்டிசன்:
மெக்சிகோ நாட்டில் உள்ள ஜாலிஸ்கோ நகரில் காடலஜாரா என்ற தேவாலயம் உள்ளது. பழைமையான இந்த தேவாலயத்தில் கடந்த 300 ஆண்டுகளாக இனோசென்சியா என்ற சிறுமியின் சடலம் கெடாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கிறிஸ்தவ மதத்தில் நம்பிக்கை மிகுந்த இந்த சிறுமி, இயேசுநாதர் மீது அதீத பக்தி கொண்டிருந்தாள். கிறிஸ்தவ கூட்டம் நடத்த தனது தந்தையிடம் இவர் அனுமதி கேட்க… அவர் மறுத்துள்ளார். அதை மீறி சிறுமி கூட்டம் நடத்த… ஆத்திரம் அடைந்த தந்தை சிறுமியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டார்.
சிறுமி ஏசுநாதர் மீது கொண்டுள்ள பக்தியை கண்டு நெகிழ்ந்த தேவாலய நிர்வாகிகள், சிறுமியின் உடலை தேவாலயத்துக்கு கொண்டு வந்து அழுகாமல் இருக்க மெழுகு வஸ்துக்களை பூசி இன்றளவும் பாதுகாத்து வருகின்றனர்.
இந்த தேவாலயத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள் வருவார்கள். சில நாட்களுக்கு முன் வந்த பயணி ஒருவர் சிறுமியின் சடலத்தை வீடியோ எடுத்தார்.. அந்த வீடியோவில் சிறுமி திடீரென கண்விழித்துப் பார்ப்பது போல் இருப்பதாக தகவல் வெளியானது. இந்த வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது.
இன்னொரு புறம், “சடலம் கண் விழித்துப் பார்ப்பது உலகுக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதை உணர்த்துகிறது” என்று சிலர் தகவல் பரப்பி வருகிறார்கள்.