உரி தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுப்பது மற்றும் எல்லைப்புற பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் இராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வந்திருக்கின்றன.
ur1
இந்த சந்திப்பில் விமானப்படை மற்றும் கப்பற்படை உயர்நிலை அதிகாரிகளுடன் இராணுவ அதிகாரிகளுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலும் உடனிருந்ததாக தெரிகிறது.
ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் உள்ள ராணுவமுகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். தாக்குதல் நடைபெற்ற உடனே “இதை செய்தவர்களை தண்டிக்காமல் விடமாட்டேன்” என்று பிரதமர் மோடி தனது ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார். பிரதமரின் வாக்குறுதியை பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிகரும் உறுதிப்படுத்தியிருந்தார்.
விரைவில் இந்திய தரப்பிலிருந்து தீவிரவாதிகளுக்கும் அதை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கும் சரியான பாடம் கற்பிக்கப்படும் என்று தெரியவருகிறது.