நவகிரகங்களை எவ்வாறு வழிப்படுவது?
நம்முடைய வாழ்வில் வரும் இன்ப, துன்பம் அனைத்தும் நவகிரகங்களின் செய்கையால் நடக்கிறது. நவகிரகங்களை வழிபடுவது நல்லது என்றாலும், எந்த ஒரு கோயிலிற்குச் சென்றாலும் மூலவரை வழிபடாமல் வெறும் நவகிரக வழிபாட்டை மற்றும் மேற்கொள்வது தவறானது.
முழு முதற் கடவுளான விநாயகரை வழிபட்ட பின்னர், அந்த கோயிலின் மூலவரை வணங்கி விட்டு, இறுதியாகவே நவகிரக வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இதுவே சிறந்த பலன்களை அளிக்கும்.
மூலவரை வழிபடாமல் நவகிரங்கங்களை மட்டும் வழிபடுவது எதிர்மறையான பலன்களையே கொடுக்கும்.
all-9-navagraha-temples12யோகம் தரும் நவக்கிரகங்கள்
1. சூரியன் – ஆரோக்கியம்
2. சந்திரன் – புகழ்
3. செவ்வாய் – செல்வச் செழிப்பு
4. புதன் – அறிவு வளர்ச்சி
5. வியாழன் – மதிப்பு
6. சுக்கிரன் – வசீகரத் தன்மை
7. சனீஸ்வரன் – மகிழ்வான வாழ்க்கை
8. ராகு – தைரியம்
9. கேது – பாரம்பரியப் பெருமை
 
நவகிரகங்களைப் சுற்றி வழிபடும் போது அந்தந்த கிரகத்திற்கும் உரித்தான எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும். அதாவது முதலில் ஒன்பது முறை சுற்றி வணங்கிய பின் அந்தக் கிரக அனுக்கிரகத்துக்காக மேலும் விசேஷமாகச் சுற்றி வந்து வழிபடுதல் வேண்டும்.
hindu_god_navakiragam_high_resolution_desktop_wallpaperஅது எத்தனை சுற்று தெரியுமா?
சூரியன் – 10 சுற்றுகள்
சுக்கிரன் – 6 சுற்றுகள்
சந்திரன் – 11 சுற்றுகள்
சனி – 8 சுற்றுகள்
செவ்வாய் – 9 சுற்றுகள்
ராகு – 4 சுற்றுகள் அடிப்பிரதட்சிணம்
புதன் – 5, 12, 23 சுற்றுகள்
கேது – 9 சுற்றுகள்
வியாழன் – 3, 12, 21 சுற்றுகள்
 
நகிரகங்களை நேருக்கு நேராக நின்று வணங்குவது தவறான ஒன்றாகும். விக்கரகங்களை தொட்டு வணங்குவது பாவம் தரும் செயல் ஆகும். எனவே அவ்வாறு செய்வதை தவிர்க்க வேண்டும்.