முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனக்கு விருப்பமான பேராசிரியர் பணிக்கு திரும்ப முடிவு செய்துள்ளார். அவர் பஞ்சாப் பல்கலைக் கழக பொருளாதாரத் துறை மாணவர்களுக்கு பாடம் கற்றுத் தரப்போவதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு பொருள் ஈட்டும் பணிகளில் ஈடுபடுவது இந்திய சட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து விளக்கம் கேட்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றக் குழு அணுகியிருந்தார்.
மன்மோகன்சிங் பஞ்சாப் பல்கலையில் மாத வருமானம் பெறப் போவதில்லை. அவருக்கு தினசரி அலவன்ஸாக ரூ.5000 வழங்கப்படும். அது பொருள் ஈட்டும் லாபகரமான தொழில் வரிசையில் சேராது எனவே அவர் பேராசிரியராக பணிபுரிய தடையில்லை என்று நாடாளுமன்றக் குழு விளக்கமளித்துள்ளது.
எனவே முன்னாள் பிரதமரை பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக விரைவில் பார்க்கலாம்.