ரவுண்ட்ஸ்பாய்:
somu-tvs-copy
ஒரு பெண்மணி தன்னோட கணவர்கிட்ட, “கொஞ்சம் தனியா பேசணும்” அப்படிம்பார். அதுக்கு அந்த கணவர், “அந்த ரூம் காலியாத்தான் இருக்கு.. போயி பேசிட்டு வாயேன்”னு கலாய்ப்பார்.
இப்ப நினைச்சாலும் சிரிப்பு வர்ற காட்சி அது.
அதே மாதிரி அரசியல்ல ஒரு காட்சி இன்னிக்கு நடந்திருக்கு.
கடந்த சட்டசபை தேர்தல்ல, ம.ந.கூட்டணியோட கூட்டணி வச்சி பெருந்தோல்வி அடைஞ்சாரு த.மா.கா. தலைவரு ஜி.கே.வாசன். அதுக்குப்பின்னால, அவரோட கட்சியிலேருந்து நெறைய பேரு அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸுன்னு துண்டை உதறி தோள்ல போட்டுகிட்டு கிளம்பிட்டாங்க.
வர்ற உள்ளாட்சி தேர்தலுக்கு, ம.ந.கூட்டணி ஆகாதுன்னு அப்பவே முடிவு பண்ணிட்டாரு ஜி.கே. வாசன். ஆனா எதையும் ரொம்ப லேட்டாதானே செய்வாரு. அதே மாதிரி, இத்தனை நாள் சும்மா இருந்துட்டு, ரெண்டு நாளைக்கு முன்னால திடீர்னு முகூர்த்தம் குறிச்சி தி.மு.க. பொருளாளரு மு.க. ஸ்டாலின சந்திச்சாரு வாசன்.
“ஒங்க பேரென்ன” அப்படினு கேட்டாலே, புரியாத மாதிரி பதில் சொல்றவரு. ஆனால இந்த சந்திப்பு பத்தி, “ஸ்டாலின் கிட்ட அரசியல்தான் பேசினேன்” அப்படினு பட்டுனு ஒடச்சாரு.  அதோட உள்ளாட்சி தேர்தல்ல தி.மு.க.வோட கூட்டணி வைக்க விரும்பறதாவும், தி.மு.க. தலைவர் கருணாநிதியை சீக்கிரமே சந்திப்பன்னும் சொன்னாரு.

ஸ்டாலின் - வாசன்
ஸ்டாலின் – வாசன்

அப்படின்னா உள்ளாட்சி தேர்தல்ல, தி.மு.க. – த.மா.கா. கூட்டணி கன்பார்மா அப்படினு ஒரு கேள்வி. அப்படி வந்துச்சுன்னா ஏற்கெனவே கூட்டணியில இருக்கிற காங்கிரஸ் என்ன பண்ணும்னு அடுத்த கேள்வி.
இந்த ரெண்டு கேள்விகளும் அரசியல் நோக்கர்ஸ் மண்டைய  உறுத்திக்கிட்டே இருந்துச்சு.
இதுக்கு டமால்னு ஒரு பதில் சொல்லியிருக்காரு மு.க.ஸ்டாலின்.
அவருகிட்ட இன்னிக்கு செய்தியாளருங்க, “திமுகவோட கூட்டணி அப்படிங்கிற மாதிரி ஜிகே வாசன் சொல்லியிருக்காரே”னு கேட்டாங்க.
அதுக்கு ஸ்டாலின், “அது அவரது விருப்பம்.. என்கிட்ட ஏன் கேக்கறீங்க” அப்படினு சிம்பிளா சொல்லி வாசனை நோஸ்கட் பண்ணிட்டாரு.
அதுமட்டுமில்ல..  “இன்னைக்கு பேப்பர் பார்க்கலியா… குறிப்பா முரசொலி பார்க்கலியா”னு செய்தியாளருங்களை கிண்டி எடுத்துட்டாரு ஸ்டாலின்.
“சட்டமன்ற கூட்டணி.. அதாவது, காங்கிரஸோட கூட்டணி.. தொடரும்னு திமுக பொதுச்செயலாளர் அனபழகன் இன்னிக்கு வெளியிட்டிருக்காரே”னு சொல்லிட்டு போயிட்டாரு முக ஸ்டாலின்.
தனியா போயி பேசுன்னு அந்த நாடகத்துல சொல்ற மாதிரி, தனியா கூட்டணி(!) வச்சுக்குங்கனு வாசனை சொல்லிட்டாரு ஸ்டாலின்.
பாவம்தான் வாசன்!