மு.க. ஸ்டாலின் கிட்ட, மது பாட்டிலை நீட்டுச்சே.. ஒரு அக்கா… ம்.. நிவேதி… அதுகிட்ட பேட்டி எடுக்கலாம்னு நெனச்சிகிட்டே இருந்தேன். அதுக்குள்ள வார இதழ் இணையத்துல அவங்க பேட்டி வந்துருச்சி. அதுல, ” சின்ன வயசிலேயே என் அப்பா, குடியால செத்துட்டாரு. அந்த சோகத்துலதான் பாட்டிலை நீட்டி குடியோட கொடுமைய சொன்னேன். ஆனா சமூகஇணையதளங்கள்ல என்னை கலாய்ச்சிகிட்டே இருக்காங்க”னு புலம்பியிருக்கு. என்னம்மா இப்பிடி பேசிப்பிட்டீங்களேம்மானு தோணுச்சு!
சரி.. அந்தக்காவ கற்பனையிலேயே பேட்டி எடுத்தேன். ஆனா கேள்விங்க நிஜம்!
1. உங்க உணர்வு புரியுதுக்கா. அதே நேரம் மது பாட்டிலை கொண்டுவந்து காண்பிச்சாதான் முன்னாள் துணை முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கோ மத்தவங்களுக்கோ மதுவோட கொடுமை புரியும்னு ஏன் நினைச்சீங்க?
2. மதுபாட்டிலை நீங்களே வாங்கினீங்களா.. வேற யார் மூலமாவது வாங்கினீங்களா..
3. மு.க. ஸ்டாலின் அப்படின்னா யாருன்னு உங்களுக்கு தெரியுமா.. சில மாசத்துக்கு முன்னால கூட, அதாவது எதிர்க்கட்சியா இருந்தப்ப கூட அவர், “மதுவிலக்கு சாத்தியமே இல்லே”னு பலமுறை சொல்லியிருக்காரு. தெரியுங்களா?
4. அவர் சாந்த தி.மு.க. கட்சியோட தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியும் அதே கருத்தைத்தான் சமீப காலம் வரை வெளிப்படுத்தினார்னு தெரியுமாக்கா?
5. தேர்தல்ல ஜெயிச்சா முழு மதுவிலக்குன்னு ஸ்டாலின் சொன்னாரே.. அவங்க கட்சி தேர்தல் அறிக்கையை தயாரிக்கிற குழு தலைவர் டி.ஆர். பாலு குடும்பத்துக்கு சொந்தமாகவே மது ஆலை இருக்கு.. கேள்விப்பட்டிருக்கீங்களா?
6. டி.ஆர். பாலு தவிர இன்னும் சில நெருக்கமானவங்க மது ஆலை நடத்தறாங்கன்னு தெரியுங்களா?
7. இதெல்லாம் தெரியல அப்படின்னா.. தினசரி பேப்பரோ.. குறைஞ்சபட்சம் டிவி செய்திகளோ பாக்கறதே இல்லியா..
8. உண்மையாவே தெரியலைன்னு வச்சுக்குவோம். தெரியாம பொதுவெளியில ஒரு பொது மனுசருகிட்ட கேள்வி கேட்கலாமா..? அதுவும் அத்தனை டிவி கேமரா, பத்திரிகை கேமரா இருக்கற நிலையில..!
ஏன்னா, சாலையில போகும்போது விதியை மீறினா விபத்து நடக்கும். நடந்தபிறகு, சாலை விதி பத்தி தெரியாதுன்னு சொன்னா சட்டமும் ஏத்துக்காது, அது, தர்மப்படியும் சரியில்லைக்கா. பெரிய படிப்பு படிக்கிற நீங்க இப்படி அப்பிராணியா இருக்கறது உங்களுக்கு மட்டுமில்ல.. இந்த சமுகத்துக்கும் நல்லதில்லைக்கா!
என்னோட கடைசி கேள்வி்:
“இதுக்கு முன்னால நாடங்கள்ல நடிச்சிருக்கீங்களாக்கா?”