level1
டில்லி:
ந்தியா முழுவதும் உள்ள ஆளில்லா லெவல் கிராசிங்கில் சிக்கி கடந்த 5 ஆண்டுகளில் 613 பேல் பலியாகி உள்ளதாக தகவல்கள் அளித்துள்ளது மத்திய அரசு.
இந்தியாவில் பெரும்பாலான ரெயில்வே பாதையில் மக்கள் செல்லும் வழியில் உள்ள பாதையில் பாதுகாப்பு வசதிகள் ஏதும் கிடையாது. இதன் காரணமாக எதிர்பாராத விதமாக ரெயில் பாதையை கிராஸ் செய்யும்போது விபத்து ஏற்பட்டு விடுகிறது.
இதுபோன்ற விபத்துக்களை தடுக்க,  நாடு முழுவதும் உள்ள ஆள் இல்லாத லெவல் கிராசிங்குகளை மாற்றுவதற்கு ரயில்வே நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது. ஆள் இல்லாத லெவல் கிராசிங் மூலமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து தகவல் உரிமை சட்டத்தில் ஹல்த்வானியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் குருவீந்தர்சிங் சத்தா மனு செய்திருந்தார்.
இதில், நாடு முழுவதும் 9 ஆயிரத்து 340 ஆள் இல்லாத லெவல் கிராசிங் இருப்பது தெரிய வந்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் 1357, ராஜஸ்தானில் 940, பீகாரில் 898, தமிழ்நாட்டில் 611 என ஆளில்லாத லெவல் கிராசிங் உள்ளன.
திரிபுரா மாநிலத்தில் ஆள் இல்லாத லெவல் கிராசிங் ஒன்று கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலில் கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள ஆள் இல்லாத லெவல் கிராசிங்கில் ஏற்பட்ட விபத்துகளில் 613 பேர் இறந்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.
2011-12ல் 204 பேரும், 2013-13ல் 124 பேரும், 2013-14ல் 98 பேரும், 2014-15ல் 130 பேரும், 2015-16ல் 57 பேரும் பலியானது தெரிய வந்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் ஆள் இல்லாத லெவல் கிராசிங்கில் 233 விபத்துகளும், ஆள் உள்ள கிராசிங்கில் 28 விபத்துகளும் நடந்துள்ளன.
பெரும்பாலான விபத்துகள், மக்கள் செல்போன் பேசியபடி கடப்பது, காதுகளில் இயர் போன் மாட்டியபடி வாகனங்களை ஓட்டி வருவது போன்றவைதான் விபத்துகளுக்கு காரணமாகின்றன.
கடந்த ஜூலை 25ம் தேதி, வேன் டிரைவர் ஒருவர் காதில் இயர்போன் மாட்டியபடியே பாட்டு கேட்டுக் கொண்டு பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற வேன் விபத்தில் சிக்கி 8 குழந்தைகள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.