
நவராத்திரி பண்டிகையையொட்டி ஒன்பது நாட்களுக்கு அமெரிக்க பீட்சா தயாரிப்பு நிறுவனமான டோமினோஸ் பீட்ஸா வட இந்திய மாநிலங்களில் முற்றிலும் சைவத்துக்கு மாறுகிறது.
நவராத்திரி பண்டிகை வடமாநிலங்களில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகையாகும். இக்காலகட்டங்களில் இப்பண்டிகையை அனுசரிக்கும் இந்துமதத்தினர் அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்த்துவிடுவர். எனவே பீட்ஸா போன்ற அசைவ உணவு வகைகளை விற்கும் உணவகங்களில் கூட்டம் கணிசமாகக் குறைந்துவிடுவதால். இந்த புதிய வியாபார உத்தியை கையிலெடுத்திருக்கிறது டோமினோஸ் பீட்ஸா.
அக்டோபர் முதல் தேதியிலிருந்து ஒன்பது நாட்களுக்கு மாமிசம், பூண்டு, மற்றும் வெங்காயம் ஆகிய உணவுப்பொருட்கள் அறவே இல்லாத “ஆச்சாரமான சைவ பீட்ஸாவை” தயாரித்து அசத்தப்போவதாக தமது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்திருக்கிறது இந்நிறுவனம்.
இதுபோன்ற மார்கெட்டிங் யுக்திகளால்தான் டோமினோஸ் பீட்சா 248 நகரங்களில், 1062 உணவகங்களுடன் பீட்ஸா விற்பனையில் முடிசூடா மன்னனாகத் திகழ்கிறது.
Patrikai.com official YouTube Channel