சென்னை: கர்நாடகாவில் இருந்து வந்து தமிழகத்தில் சூப்பர்ஸ்டாராக இருக்கும் ரஜினிக்கு, காவிரி பிரச்சினை தர்மசங்கடமான பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக  வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ்.

பாக்யராஜ்
பாக்யராஜ்

‘கடிகார மனிதர்கள்’. என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரபலங்கள் பலரும் காவிரி பிரச்சினை குறித்தும் மேடையில் பேசினர்.
முதலில் தயாரிப்பாளர் வி.சி.குகநாதன் பேசுகையில், “கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை பேடர கண்ணப்பா என்ற படத்தில் அறிமுகப்படுத்தியவர் தமிழர் ஏவி.எம். மெய்யப்பன்தான்.  இப்படி இருக்கையில் ராஜ்குமாரின் மகன்கள் தமிழர்களுக்கு எதிராக செயல்படலாமா? தண்ணீர் தர மாட்டோம் என்று சொல்லலாமா?” என்றார்.
கடிகார மனிதர்கள் ஆடியோ விழா
கடிகார மனிதர்கள் ஆடியோ விழா

அதனைத் தொடர்ந்து பேசிய இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ், “காவிரி பிரச்சினை குறித்து பேசினாலும் பிரச்சினை, பேசாவிட்டாலும் பிரச்சினை என்ற நிலை  இருக்கிறது.  கர்நாடக திரைக்கலைஞர்கள் என்னவெல்லாம் பேசுறாங்க. செய்றாங்க.. உங்களுக்கு மானம், ரோஷம் இருக்கா.. சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுறீங்களா..?’என்று நம் ஆட்களிடம் கேட்கப்படும்போது  நாம் என்ன செய்ய முடியும்?
 
நமக்கே இப்படியிருக்கும் போது கர்நாடகாவில் இருந்து வந்து தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டாரா இருக்கும் ரஜினிக்கு எப்படி பீல் பண்ணுவார்.  அவருக்கு இது எவ்வளவு பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கும். அதனால் இந்த காவிரி நீர் பிரச்சினையை அமைதியாக பேசித் தீர்த்துக் கொள்வதுதான் சரியான வழி” என்று பாக்யராஜ் கூறினார்.