sss

 தாய்ப்பால் பெருக என்னென்ன சாப்பிட வேண்டும் என்பது பலருக்கும் தெரியும். ஆனால்  எந்தெந்த உணவுவகைகளை தவிர்க்க வேண்டும் என்பது பெரும்பாலோருக்குத் தெரியாது. அவை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

மிளகாய், மிளகு, வெங்காயம் போன்றவற்றை அதிகம் பயன்படுத்தக்கூடாது.  ஏனென்றால் இது போன்ற காரமான பொருட்களை  குழந்தையின் உடல் ஏற்றுக் கொள்ளாது வயிற்று வலி, வயிற்றுப் போக்கு ஏற்படும்.

அன்னாசி, ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் பலவற்றை அதிகமாக சாப்பிட்டால், குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்படும்.

முட்டை கோஸ், காலி ஃப்ளவர், ப்ராக்கோலி மற்றும் வெள்ளரிக்காய் போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது.  இவை குழந்தைகளுக்கு வாயுத் தொல்லையை ஏற்படுத்தும்.

பலர், பசும்பாலை அதிகம் குடித்தால் அதிகம் பால் சுரக்கும் என தாய்மார்கள் நினைக்கிறார்கள். இது தவறு, அதிகமாக பசும்பால் குடித்தீர்கள் என்றால், குழந்தைக்கு பெருங்குடலில் பெரும் வலி ஏற்படும். ஆகவே பால், தயிர், வெண்ணை, நெய் போன்ற பால் பொருட்களை குறைவாக உண்ணுங்கள்.

மீன்களில் கானாங்கெளுத்தி, ஸ்வார்டுபிஷ், டைல் ஃபிஷ் மற்றும் சுறா போன்றவற்றை தவிருங்கள்.  ஏனென்றால்,  இவை குழந்தைக்கு உடல் அலர்ஜியை ஏற்படுத்தும்.

அதிகமாக காபி குடிக்கக்கூடாது.  காபி, குழந்தையின் தூக்கத்தை கெடுக்கும்.  அதே போல சாக்லேட் சாப்பிடுவதைத் தவிர்ப்பதும் நல்லது.

வேர்க்கடலை நல்லதுதான் என்றாலும், அதிலும் ஒரு லிமிட் வேண்டும். அதிகமாக வேர்க்கடலை சாப்பிட்டால், குழந்தையின் உடலில் அலர்ஜி ஏற்படும்.

 – யாழினி