கொல்கத்தா:
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் இயங்கும் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேசியக் கட்சி என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது. இத்தகவலை தேர்தல் கமிஷன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
2mamtha
மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மட்டும் திரிணமுல் காங்கிரஸ் மாநிலக் கட்சியாக இதுவரை செயல்பட்டு வந்தது. இப்போது அக்கட்சிக்கு 1968-ல் கொண்டுவரப்பட்ட  கட்சிகளுக்கான அங்கீகாரம் மற்றும் சின்னங்கள் தொடர்பான சட்டத்தின்கீழ் அக்கட்சிக்கு தேசியக்கட்சி அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.
இச்சட்டத்தின்படி தனது கட்சி சின்னமான  இரட்டைப் பூக்கள் பயன்படுத்தி இனி இந்தியா முழுவதும் தேர்தலில் நிற்க முடியும்.  இக்கட்சிக்கு மக்களவையில் 32 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 12 உறுப்பினர்களும் உள்ளனர். மேலும் சமீபத்திய தேர்தல் வெற்றிகளும் அக்கட்சிக்கு தேசியக் கட்சி அங்கீகாரத்தை எளிதில் பெற்றுத் தந்துள்ளது.