சென்னை:
“சொல்லுவதெல்லாம் உண்மை” என்ற டிவி நிகழ்ச்சியை நடத்தும் லட்சுமி ராமகிருஷ்ணன், தனது தந்தையை தற்கொலைக்கு தூண்டியதாக இளம்பெண் ஒருவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
பள்ளிக்கரணையை சேர்ந்தவர் நாகப்பன் (வயது 60). சொந்தமாக, இரண்டு2 லாரிகள் வைத்திருந்தார். மனவியும் ஒரு மணிகண்டன் என்ற மகனும், ராதிகா என்ற மகளும் இருக்கிறார்கள். மகள் ராதிகாவுக்கு திருமணமாகி காஞ்சிபுரத்தில் வசிக்கிறார்.
நாகப்பன் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்படவே, மைத்துனி ரேணுகாவுடன் வசித்து வந்தார். பிறகு அவரையும் பிரிந்து தனியாக வசித்துவந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம், நாகப்பனின் மைத்துனி ரேணுகா ஸீ டிவியில் ஒளிபரப்பாகும் சொல்லுவதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் நாகப்பன் மீது புகார் கூறினார். இதையடுத்து கடந்த மாதம் 5 ஆம் தேதி நாகப்பன் மற்றும் அவரது மகள் ராதிகாவை கவுன்சிலிங் அளிப்பதாக கூறி நிகழ்ச்சி நடத்துனர்கள் அழைத்தனர். அப்போது, நிகழ்ச்சி நடத்தும் லட்சுமி ராமகிருஷ்ணன் நாகப்பனை நோக்கி அவதூறான கேள்விகளை எழுப்ப. நாகப்பன் கூனிக்குறுகி நின்றார்.
இந்த நிகழ்ச்சியை கடந்த மாதம் 22 ஆம் தேதி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பி மறுநாள் மீண்டும் மதியம் 2 மணிக்கு மறு ஒளிப்பும் செய்தனர்.
இதனால் அவமானமடைந்த நாகப்பன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையல், தனது தந்தையின் சாவுக்கு காரணமான ஸூ தமிழ் டிவியின் நிகழ்ச்சி ஒளிபரப்பாளர்கள் , நிகழ்ச்சி நடத்துனர் லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் மீதும், ரேணுகா அவரது மகள்கள் மீதும் நாகப்பன் மகள் ராதிகா புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாததால் இன்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலத்தில் புகார் அளித்தார். செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், “எங்களது சொந்த குடும்ப பிரச்சனையில் கவுன்சிலிங் கொடுப்பதாக கூறியும், ரேணுகாவின் மகள்களுக்கு உதவி தொகை வழங்கப்போவதாக சொல்லியும் எனது தந்தையை கையெழுத்து போட வேண்டும் என்று அழைத்தனர். ஆனஆல் அங்கு அவரை அவமானப்படுத்தி மிரட்டினார்கள் எங்களையும் அழைத்து தனி அறைக்குள் பூட்டி செல்போன்களை பிடுங்கி வைத்துகொண்டு பேச வைத்தார்கள். எனது தந்தையின் மீது அபாண்ட புகார் கூறி லட்சுமி ராமகிருஷ்ணன் மிக கேவலமாக பேசினார். இதை ரகசியமாக படமெடுத்து வைத்து கொண்டார்கள். அதே நேரம், இதை ஒளிபரப்ப மாட்டோம் என்று கூறினர் ஆனால் பின்னர் இதை ஒளிபரப்பினர்.இதனால் எனது தந்தை அவமானத்தால் விரக்தி அடைந்து தற்கொலை செய்துகொண்டார்” என்றார்.
மேலும், ” என் தந்தையின் மரணத்துக்குக் காரணமான லட்சுமி ராமகிருஷ்ணன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸீதமிழ் டிவி,ரேணுகா மற்றும் அவரது மகள்கள் மீதும் நடவடிக்கை வேண்டும்” என்று ராதிகா தெரிவித்தார்.