ந்திய மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் 2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வென்ற வெண்கலப்பதக்கம் வெள்ளிப்பதக்கமாக உயர்வு பெற வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது.
அந்தப்போட்டியில் யோகேஷ்வர் தத்தை வீழ்த்தி பேசிக் குட்கோவ் என்ற ரஷ்யவீரர் வெள்ளிப்பதக்கத்தை வென்றிருந்தார். இவர் நான்குமுறை உலகச் சாம்பியன் பட்டத்தையும், இருமுறை ஒலிம்பிக் பதக்கங்களையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2013-இல் நடந்த ஒரு கார்விபத்தில் சிக்கி குட்கோவ் உயிரிழந்தார். அப்போது நடைபெற்ற பிரேதப் பரிசோதனையில் அவர் போதை மருந்துப் பழக்கமுள்ளவர் என்ற தகவல் தெரியவந்துள்ளது.
yogesh
இதன் அடிப்படையில் ஒலிம்பிக் விதிகளின்படி அவர் பெற்ற வெள்ளிப்பதக்கம் யோகேஷ்வருக்கு மாற்றியமைக்கப்படலாம் என்ற தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் இத்தகவல் இன்னும் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை