சிரிய நாட்டு எல்லையில் அரசு படைகள் பீப்பாய் குண்டுகள் மூலம் தீவிரவாதிகள் மீது வீசியபோது அப்பாவி பொதுமக்கள் 15 பேர் இறந்தனர்.
சிரியாவில் கடந்த 2011-இல் இருந்து உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது கடந்த ஒரு வருடத்தில் இது மேலும் தீவிரமடைந்துள்ளது.
இந்த உள்நாட்டுப் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியதாக தகவலல்கள் தெரிவிக்கின்றன. மேலும் முப்பது லட்சம் பேர் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.

சிரிய அரசுக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் நடந்துவரும் கடுமையான யுத்ததில் இப்போது துருக்கியும் “யூப்ரடிஸ் ஷீல்ட்” என்ற பெயரில் களத்தில் குதிக்க நிலைமை கட்டுக்குள் அடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது. அமெரிக்காவும் அதன் பங்காளியான சர்வதேச கூட்டுப்படையினரும் துருக்கிக்கு ஆதரவாக சிரிய எல்லைகளில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் நிலைகள் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே  கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் பகுதிகளில் சிரிய அரசு நடத்திய வான்வழித்தாக்குதலில் நெருப்பைக் கக்கும் கொடூர குண்டுகள் வீசப்பட்டதாகவும் அதில் இரு சிறுமிகள் கொல்லப்பட்டதாகவும் ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் துருக்கி ராணுவ டாங்குகள் மீது ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஒரு துருக்கி வீரர் கொல்லப்பட்டதாகவும் மூன்று ரானுவவீரர்கள் காயமடைந்ததாகவும் தெரியவருகிறது.
யுத்தம் நடந்துவரும் பகுதிகளிலுருந்து பொதுமக்கள் அரசு கட்டுப்பாட்டிலுள்ள தமாஸ்கஸ் நகரின் புறநகர்ப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருவதாக சிரிய டிவி தெரிவித்துள்ளது.
barele
கிளர்ச்சியாளர்கள் பிடியிலுள்ள அலெப்பா நகரில் சிரிய அரசின் ஹெலிகாப்டர்கள் பொதுமக்கள் மீது பீப்பாய் குண்டுகளை வீசியதில் 15 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கிளர்ச்சியாளர்கள் தரப்பு குற்றம்சாட்டியிருக்கிறது. பீப்பாய் குண்டு என்பது உலோகப் பீப்பாயில் நச்சு இரசாயனம், வெடி மருந்து, தலையற்ற கூரான ஆணிகள் மற்றும் உடைந்த கூரான உலோகத்துண்டுகள் ஆகியவறை  பீப்பாயில் வைத்து சீல்செய்து ஹெலிகாப்டடிலிருந்து போடுவார்கள் அது பயங்கர சத்தத்துடன் வெடித்து அதிலிருந்து நச்சுப் புகை கிளம்பும், உலோகத் துண்டுகளும் ஆணிகளும் சீறிப்பாய்ந்து தாக்கும். மக்கள் கூட்டமாய் நின்றிருந்த இடங்களை குறிபார்த்து பீப்பாய் குண்டுகள் ஹெலிகாப்டரிலிருந்து வீசப்பட்டதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் துருக்கியும் ஜரபுலஸ் நகரில் வான்வழித் தாக்குதலை தொடங்கியிருப்பது நிலைமையை இன்னும் மோசமாக்கியிருக்கிறது. துருக்கியின் இந்த தாக்குதலை பிரிட்டன் சார்பில் இயங்கிவரும் மனித உரிமைகள் அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.