புதுடெல்லி:
ந்திய கடற்படைக்காக, பிரான்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நீர்மூழ்கி கப்பல் குறித்த ஆவனங்கள் கசிந்தது உண்மைதான் என மத்திய அமைச்சர் பாரிக்கர் தெரிவித்து உள்ளார்.
இந்திய கடற்படைக்‍காக, ஃபிரான்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியா தயாரித்து வரும் அதி நவீன  ஸ்கார்பீன் நீர் மூழ்கி கப்பல்கள்   தொடர்பாக  சுமார் 22 ஆயிரம்  பக்கங்கள் அளவிலான  ஆவணங்கள்  கசிந்துள்ளதாக வெளியான  தகவல் பாதுகாப்புத்துறையை  பெரும் அதிர்ச்சியடைய  செய்தது.  ஸ்கார்பீன்  நீர்மூழ்கிக் கப்பலின்ரகசியங்கள்  பிரான்சிலிருந்தே  கசிந்ததாகவும்,  இந்தியாவிலிருந்து  அல்ல என்றும்,  இந்த விவகாரத்தை அம்பலப்படுத்திய  ‘தி ஆஸ்திரேலியன்’  பத்திரிகை நிருபர்  ஸ்டீவர்ட் கேமரூன் தெரிவித்திருந்தார்
Scorpion_Submarine_India parkar
‘Restricted Scorpene India’  என்ற தலைப்பில் உள்ள அந்த ஆவணத்தில்  மிக மிக நுட்பமான போர்  உத்திகள் குறித்ததகவல்கள் இடம்பெற்றிருந்ததாகவும், இவற்றில் நீர்மூழ்கிக் கப்பலில், கடலுக்கடியில் செயல்படும் சென்சார்குறித்தும், நீருக்கு மேல் செயல்படும் சென்சார்கள் குறித்தும் தெரிவிக்‍கப்பட்டிருந்தது. மேலும், போர் உத்திகள்,தொலைத்தொடர்புகள் மற்றும் நேவிகேஷன் கட்டமைப்பு குறித்த தகவல்களும் இடம்பெற்றிருந்தன.
 இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களுக்‍கு பேட்டியளித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.மனோகர் பாரிக்‍கர், நீர்மூழ்கி கப்பல் தொடர்பான ரகசிய ஆவணங்கள் கசிந்தது உண்மை தான் எனகுறிப்பிட்டார். இதுதொடர்பாக ஆய்வு செய்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்க கடற் படை தலைமை தளபதிக்‍கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.