தாமோ:
த்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தாமோ மாவட்டத்தில் பயணத்தின் போது உடல்நலமில்லாமல் இறந்த பெண்ணின் உடல் மற்றும் அவரது கணவரை மனிதாபிமானமின்றி நடு காட்டில் பஸ்சின் டிரைவர் இறக்கி விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
damoh-
கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் இதுபோன்ற மனிதாபிமானமற்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவது ஊடங்கள் வாயிலாக வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கிறது.  தற்போது மத்திய பிரதேசத்திலும் இந்த வெடக்கேடன சம்பவம் நடைபெற்றுள்ளது
மத்திய பிரதேசம் தமோ அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்தவர் ராமன்சிங்.  இவர் தனது ஊருக்கு செல்வதற்காக நோயுற்ற மனைவி மற்றும் 5 வயது மகனுடன் பஸ்சில் பிரயாணம் செய்தார்.
பஸ் சென்றுகொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக அவரது நோய்வாய் பட்டிருந்த மனைவி திடீரென மரணமடைந்தார். இதை அறிந்த பஸ்சின் டிரைவர் அவர்களை உடனடியாக நடு காட்டில் பஸ்சில் இருந்து கீழே இறக்கி விட்டுவிட்டார்.
டிரைவரின் மனிதாபிமானமற்ற செயலால் அவர் வெகுநேரம் காட்டில் தனியாக ரோடு ஓரம் தனது இறந்த மனைவியின் உடலுடன் நின்று கொண்டிருந்தது பார்ப்பவர்களின் கல் மனதையும் கலங்க செய்தது.
பிரயாணத்தின்போது நடுவழியில் இறந்த அந்த பெண் கடந்த 5 நாட்களுக்கு முன்புதான் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்ததும், அதையடுத்து, அவரை மருத்துவமனையில் இருந்து சொந்த ஊருக்கு கூட்டிக் கொண்டு செல்லும்போது எதிர்பாராதவிதமாக இறந்ததும் தெரிய வந்தது.
செய்வதறியாகது இறந்த மனைவியின் உடலுடனும், கையில் பிறந்த கைக் குழந்தையுடனும் நடு காட்டில் தனியாக வெகுநேரம்  நின்றிருந்த ராமன்சிங்கின் அவல நிலைய கண்டவர் யாரும் உதவி செய்ய முன் வரவில்லை.
அந்த நேரம் பைக்கில் வந்த ஒருவர் பார்த்து,  ராமன்சிங்கின் நிலை கண்டு அதிர்ச்சி அடைந்து,  உடனடியாக போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் கொடுத்து நடவடிககை எடுத்தார். இதன் காரணாக  ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அதன்  மூலம் அவரது உடல் சொந்த ஊருடககு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து மத்தியபிரதேச  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.