டாக்டர் Saravanan K அவர்களின் முகநூல் பதிவு:
எனக்குத் தெரிந்து டாக்டர்கள் பற்றி படம் எடுப்பவர்கள் முழுமையாக அவர்களைப் பற்றியோ அல்லது அவர்கள் கல்லூரியில் படிக்கும் முறை பற்றியோ முறையாக அறிந்து எடுப்பவர்கள் யாரும் இல்லை என்றே நினைக்கிறேன். சமீபத்திய தர்மதுரை படத்தில் கூட ராஜேஷ் கதாபாத்திரம் (புரொஃபசர் ) முதல் வருடம் தொடங்கி இறுதி ஆண்டு வரை வகுப்பெடுப்பது போல் காண்பிக்கிறார்கள். அதற்கு சாத்தியமே இல்லை.அடுத்து இடைவேளை வரை ஏன் விஜய் சேதுபதி மனநிலை பிறழ்ந்தவராகவே இருக்கிறார் என்று சொல்லாததால் படம் மொக்கை போடுவது போல் தோன்றுகிறது.
அதன் பிறகு அவரின் பிளாஃஷ் பேக் தெரிந்து அப்பாடா இப்பவாச்சும் சொன்னாங்களே என்று ஆசுவாசம் வருகிறது. அது ஏன் விஜய் சேதுபதி பீட்சா ,ந கொ ப கா ,நானும் ரவுடி தான் தொடங்கி தர்மதுரை வரை மனம் பிறழ்ந்த நடிப்பையே வெளிப்படுத்துவது போல் பார்க்கும் நமக்கு சலிப்பு வருகின்றன. நிச்சயம் அவர் நடிக்கும் ஸ்டைலை மாற்ற வேண்டும்.
இந்தப் படத்தில் மருத்துவ சேவை ,வரதட்சணை, மறு மணம் ,,பைனான்ஸ் கம்பெனி ,பெண் சிசுக் கொலை, குடி மீட்பு என்று பல விசயங்களை தொட்டுச் செல்கிறது. இது தான் இதன் சிறப்பு என நினைக்கிறேன்.
ராதிகா காவல் நிலையத்தில் ஆய்வாளர் தன் மகன் மீது FIR போட சொன்னதும் “நீங்களும் என் மவனும் ஒன்னா கள்ளர் பள்ளிக் கூடத்தில் படிச்சவங்க தானே அவன் ஒன்றும் களவாண்டிருக்க மாட்டான் “என்பார். இதில் என்ன லாஜிக் இருக்கிறது.? நீங்களும் அவனும் ஒரே சாதி என்பதை சுட்டுகிறாரா இயக்குனர்.
எல்லோரும் ஆகா ஓகோன்னு சொன்ன மாதிரி பெருசா இல்லை. ஓகே ரகம் அவ்வளவு தான்.