புதுடெல்லி:
பாலியல் வழக்கில் ஆஜராக மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுமீது, 6 வார காலம் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.
பாலியல் வழக்கு தொடர்பான முன்ஜாமீன் மனுக்கள் மீது சந்தேகம் இருப்பதால் வரும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 29) நேரில் ஆஜராக வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, அவரது கணவர், மகன் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
பாலியல் வழக்கு விசாரணையில், சசிகலா குடும்பத்தின்ர் தாக்கல் செய்த மனுக்கள் மீது, அரசு வழக்கறிஞர் சந்தேகம் கிளப்பியதால், நீதிபதி வேலுமணி, ” மூவரும் நீதிமன்றத்தில் வரும் 29-ஆம் தேதி ஆஜராக வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.
ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவை எதிர்த்து சசிகலா புஷ்பா உள்ளிட்ட மூவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
“உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் தாக்கல் செய்த போது நாங்கள் இந்தியாவில்தான் இருந்தோம். வெளிநாடு செல்லவில்லை. எனவே, நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உச்சநீதி மன்ற நீதிபதிகள் 6 வார காலம் சசிகலா புஷ்பாவை கைது செய்ய தடை வித்து உத்தரவிட்டு உள்ளனர்.
Patrikai.com official YouTube Channel