பத்திரிகையாளர் எம்.பி. திருஞானம் (Thirugnanam Mylapore Perumal ) அவர்களின் முகநூல் பதிவு: · 
” கூவத்தை தேம்ஸ்   நதி தீரமாக மாற்றியே தீருவேன் ” என்று சபதம் செய்து, பட்ஜெட் போட்டு,  அதில் துண்டு போட்டு,  ஆய் துறை, ஔவை துறை, ஒய் துறை – என்று  படகுத் துறைகளை கருணாநிதி கட்டியதெல்லாம் உண்மை !
அந்தத் துறைகள் இப்போதும் கருணாநிதியின் பழைய ஊழலை நிரூபிக்க –
பல்லிளிக்கின்றன !
படகு போக்குவரத்து நடந்ததாக  சிலர் சொல்வது – உண்மை அல்ல !
படகு போக்குவரத்து துவக்க விழா நாளன்றே,  ஒரு படகு கவிழ்ந்து – நாலு MLAக்கள் கூவத்தில் விழுந்தனர் !   அத்தோடு முடிந்தது,  படகு போக்குவரத்து !
கூவத்தை  ஆக்கிரமிக்கும் வேலை, சென்னை மாநகராட்சியை திமுக கைப்பற்றியதும்  லேசாகத் துவங்கி,  1967ல் திமுக ஆட்சி வந்ததும், முழு வீச்சில் நடந்தது !

சம்பத்
சம்பத்

பொதுப் பணித் துறை, மின்சாரத்துறை, மாநகராட்சி AE, EE,லோகல் கவுன்சிலர், மேயர்கள் துணையோடு – 1977 தேர்தலுக்கு முன்பு –  கூவம் ஆறுக்குள்ளேயே 1280 வீடுகள்,   400 மெக்கானிக் ஷெட்கள்,  காயலான் கடைகள்,  லைனிங் கடைகள்,  ஆட்டோ மெக்கானிக் ஷாப்கள், டீ கடைகள் வந்துவிட்டது !
இப்போதும் இருக்கிறது !
இந்த கடைகள், வீடுகளுக்கு,  மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது !
ஓட்டு வாங்குவதற்காகவும்  அவர்களிடம் பேரம் பேசி  பணம் பிடுங்கவும் கூவத்தை ஆக்கிரமித்த  மக்களை – மேலும் உற்சாகப்படுத்தினர், லோகல் திமுக செயலாளர்கள், வட்ட கவுன்சிலர்கள் !
கூவத்தில் கருணாநிதி படகு பயணம்
கூவத்தில் கருணாநிதி படகு பயணம்

சென்னையில் – கூவத்தில் வசிக்கும் வாக்காளர்கள் 10 ஆயிரம்பேர் இருக்கும் !  இவர்களுக்கு ரேஷன் கார்டும் இருக்கு !  ஆதார்கூட இருக்கு !
கூவத்தைவிட  நாற்றம் அடிக்கும்….   திமுக செய்த கூவம் ஊழலைப் பேசினால் !
திமுகவை உருவாக்கிய   ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரான சொல்லின் செல்வர் – EVK சம்பத்,  [ EVKS இளங்கோவனின் தந்தை ]  நுங்கம்பாக்கம் ஏரியில் – 1969 இறுதியில், காங்கிரஸ் பொதுக் கூட்டம் ஒன்றில்…  ”கூவமும் – கருணாநிதியும் வேறு வேறல்ல. ரெண்டும் ஒண்ணுதான்.  அப்படி நான் சொன்னதற்கு –   கூவம் வேண்டுமானால்,   என் மீது வருத்தப்படலாம்.  வழக்குப் போடலாம்,  ‘என்னை ஏன் கருணாநிதியுடன்   கம்பேர் செய்தாய் ?  நான் அவ்வளவு மட்டமா ?’  என்று கேட்கலாம்…” இவ்வாறு பேசினார் !