ரியோ டி ஜெனிரோ:
 ரியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கிப் போட்டியில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி 0-5 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டினாவிடம் தோல்வியுற்றது. இதன் காரணமாக கால் இறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.
அதையடுத்து, குரூப்பில் ‘பி’-யில் உள்ள இந்திய அணி. முதலில் ஜப்பானுடன் நடைபெற்ற ஆட்டத்தில் 2-2 என்ற கணக்கில் டிரா செய்தது.
hockey
அடுத்த போட்டியில் பிரிட்டன் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா அணிகளுடன் நடந்த அனைத்து போட்டிகளிலும்  இந்திய அணி தோல்வியையே சந்தித்தது.
இந்நிலையில் இன்று அர்ஜென்டினாவுடன் மோதியது. இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய அர்ஜென்டினா 5-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதன்மூலம் தொடர்ந்து 4-ஆவது தோல்வியை சந்தித்ததால்,  இந்திய அணி, காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.