தியேட்டருக்குள் நுழைந்துவிட்டாலே அது வேறு உலகம். நம்மையோ, நம்மைச் சார்ந்தவர்களையோ திரையில் எதிர்பார்க்கக்கூடாது என்பது விதியாகிவிட்டது.  இதில் விதிவிலக்குகளான படங்களின் சிறு பட்டியிலில் இடம் பிடித்து, நம் மனதிலும் அழுத்தமாக வந்து அமர்ந்துவிடுகிறது ஜோக்கர்.
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மன்னர் மன்னன் என்கிற கதாபாத்திரத்தை கொண்டு சுழல்கிறது கதை.  தன்னையே ஜனாதிபதியாக நியமித்துக்கொள்ளும் இவர்,  துணைக்கு இருவரை  இருவரை சேர்த்துக்கொண்டு  நாட்டில்  நடைபெறும் அநீதிகளை தட்டிக்கேட்கிறார்.
c
2020 ஆம் ஆண்டில் அனைத்து சிறுவர்க்கும்  வகுப்பறை. அனைவருக்கும் கழிப்பறை என்பதுதான் இந்த ஜனாதிபதியின் முதன்மையான  கொள்கை, முழக்கம், லட்சியம் எல்லாம்!  இந்த “காமன் மேன்” வார்த்தைகள்,   அதிகார வர்க்கத்தை எட்டியதா, அதனால் என்ன விளைவுகள் என்பதை சுவாரஸ்யமாக சொல்கிறார் ராஜூ முருகன்.
மன்னர் மன்னன் என்கிற “ஜனாதிபதி”  காவல்துறை  உள்ளிட்ட அதிகார வர்க்கங்களுக்கு  குடைச்சல்கள் சுவாரஸ்யம். இயல்பான,  குரு சோமசுந்தரத்தின் நடிப்பு கதாபாத்திரத்துடன் ஒன்றச் செய்துவிடுகிறது.
எழுத்தாளர் பவா செல்லதுரை முதன் முதலாக நடித்திருந்தாலும், பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார்  . நடிகைகள் காயத்ரி, ரம்யா முதல்  அனைவருமே நடிப்பில் ஜொலிக்கிறார்கள்.
கதைக்களமான, தர்மபுரி மாவட்டத்துக்க நம்மை அழைத்துச் சென்றுவிடுகிறார்கள் கலை சதீஷூம், காமிரா செழியனும்.  ஷான் ரோல்டனின் இசையும் கதையோடு ஒட்டி பயணிக்கிறது.
aa
யுகபாரதியின் என்னங்க சார் உங்க சட்டம், ஓலை குடிசையிலே பாடல்கள், கதையை பிழிந்து சாறாக்கித் தருகின்றன. சுவை. ரமேஷ் வைத்யாவின் செல்லம்மா பாடலும் மனதிலேயே ரீங்காரமிட்டு நிற்கிறது.
ஹெலிகாப்டரை பார்த்து வணங்கும் அமைச்சர்கள், ஏர்கூலர் உண்ணாவிரதம், என்று சட்டென புரிந்து ரசிக்கும்படியான  வசனங்கள்.
அதே நேரம், மன்னர் மன்னனின்  போராட்டங்களையே ஆரம்பத்தில் ரொம்ப நேரம் சொல்வது ஒருவித அலுப்பை ஏற்படுத்துகிறது.

இயக்குநர் ராஜூமுருகன்
இயக்குநர் ராஜூமுருகன்

அரசியல் படம் என்றால், எம்.எல்.ஏக்களின் ரகசிய திட்டங்கள், மது விருந்து, அழகிகள்(!).. இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது தமிழ் சினிமாவின் விதி.  அதற்கு விதிவிலக்காக வந்திருக்கும் சில படங்களில் இந்த ஜோக்கரும் ஒன்று.
ஜனநாதன், வசந்தபாலன், சீனு ராமசாமி போன்றோர் வரிசையில் இயக்குநர் ராஜூமுருகனும் சேர்ந்திருக்கிறார்.
ஜோக்கர்.. சிந்திக்க வைக்கிறார்!