இன்று: நண்பர்கள் தினம் 
வ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிறு அன்று உலக நண்பர்கள்தினமாக கொண்டாடப்படுகிறது.
5
நட்பு பற்றி கவிஞர் கண்ணதாசன் சொன்னதை படியுங்கள்:
“பனைமரம்: தானாக முளைத்து ,தனக்கு கிடைத்த நீரை குடித்து தன் உடம்பையும்,ஓலையையும் மற்றும் நுங்கையும் உலகத்திற்குதருகிறது. நம்மிடம் எந்த உதவியும் கேட்காமல் உதவுபவன் பனைமரம் போன்றநண்பன்.
தென்னைமரம்: தென்னை நம்மால் நடப்பட்டு தண்ணீர் ஊற்றி வளர்த்தால் பலன் தருகிறது.
அதுபோல நிமிடம் உதவி பெற்று நண்பனாக இருப்பவன் தென்னை மரத்துக்கு இணையானவன்.
வாழைமரம்: தினமும் தண்ணீர் ஊற்றினால் தான் பலன்தரும்.அதுபோல நம்மிடம் தினமும் உதவி பெற்று வாழ்பவன் வாழைமரம் போன்றவன்.
இந்த மூவரில் பனைமரம் போன்றவனை தேர்ந்தெடுக்க வேண்டும்!”