மலேசியத் திரைப்பட விழாவில் திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில் இனப்பாகுபாடு காட்டப்படுகிறதா என்ற கோணத்தில் எழுந்த சர்ச்சை உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது.
28வது மலேசியத் திரைப்பட விழா கோலாலம்பூரில் நடைபெற்று வருகின்றது.
இவ்வாண்டுக்கான மலேசியத் திரைப்பட விழாவின் நீதிபதிகள் குழுவிற்கு நான்சி ஃபூ தலைமையேற்கிறார்
மலேசியத் திரைப்பட விழாவிற்கு , FINAS எனப்படும் தேசிய திரைப்பட மேம்பாட்டு வாரியம் மலேசியத் திரைப்படங்களின் வழி தேசிய மொழியான மலாய் மொழியியை மேம்படுத்தப்படுவதை ஊக்கப்படுத்துகின்றது. எனவே 70 விழுக்காட்டு மலாய் மொழி திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக
அறிவிக்கப்பட்ட மலேசியத் திரைப்பட விழா விருதுகளின் பரிந்துரையில் சிறந்த படம், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகிய பிரிவுகள் மலாய்மொழி பிரிவு மற்றும் மலாய்மொழி அல்லாத பிரிவு என இருவகையாகப் பிரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டன.
விருதில் எதற்குப் பிரிவினை?
மலாய் அல்லாத பிரிவில் ‘ஜகாட், ஓலா போலா’ ஏன்? எனக் கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.
இதில் ஜகாட் மற்றும் ஓலா போலா ஆகிய படங்கள் சிறந்த படத்திற்கான பிரிவில் சேர்க்கப்படவில்லை.
ஜகாட் மற்றும் ஓலா போலா ஆகிய படங்கள் மலாய்மொழி அல்லாத பிரிவில் சிறந்த படங்களுக்காகப் பரிந்துரைக்கப்பட்டன.
ஆனால், இவ்வாறான தரமான படங்கள் மலாய்மொழி அல்லாத பிரிவில் சேர்த்தது குறித்து சர்ச்சை எழுந்தது, கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டன.
ஏன் இந்தப்படங்கள் சிறந்தப்படங்களுக்கான பட்டியலில் இடம்பெறவில்லையெனக் கேள்வி எழும்பியுள்ளது.
அதிகரிக்கும் கண்டனக் குரல்:
இந்த ‘மலாய் அல்லாத’ எனும் பிரிவை உருவாக்கியதற்கு சிலாங்கூர், கோலாலம்பூர் கதாசிரியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜகாட், ஓலா போலா போன்ற தரமான படங்கள் இவ்வாறு பிரிக்கப்படுவது கண்டு நாங்கள் எரிச்சல் அடைகிறோம்” எனச் சங்கத்தின் அல்பியன் பலெர்மோ தெரிவித்தார்.
மலேசிய திரைப்பட மேம்பாட்டு வாரியமான பினாஸ் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியவை ஏன் இனபாகுப்பாட்டைக் காட்டும் பிரிவுகளை உருவாக்க வேண்டும்.
இவ்வாறான செயல்களால் மலேசிய சினிமாவில் ஒற்றுமையை வளர்க்க முடியுமா? இதில் அரசாங்கத்தின் ஒரே மலேசியா கோட்பாடு எங்கே? இது மலேசியத் திரைப்பட விழா, மலாய் திரைப்பட விழா அல்ல” என அவர் மேலும் கூறினார்.
மேலும், பரிந்துரை நெறிமுறைகளை புதுப்பிக்கப்பட வேண்டும் எனவும் அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திரைப்பட விழாவைப் புறக்கணிக்கும் பிரபலங்கள்:
தரமான படங்கள் மலாய்மொழி அல்லாத பிரிவில் சேர்த்தது குறித்து சர்ச்சை எழுந்தது, கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டன.
அஃப்ட்லின் சௌகி:
இதனைக் கண்டிக்கும் விதமாக இயக்குநரும், பாடகரும், காமடி நடிகருமான அஃப்ட்லின் சௌகி இந்த விழாவினைப் புறக்கணிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
முகமட் நோர் காசிம்:
இவர் ‘பிரவோ வீ’ படத்திற்காகச் சிறந்த ஒளிப்பதிவாளர் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டார். இவரோடு, போலீஸ் ஈவோ, முனாஃபிக், மாட் மோடோ, மற்றும் ஜகாட் ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னர், ஆறு முறை இந்தத் திரைப்பட விழாவில் பரிந்துரைக்கப்பட்ட இவர், 2009 மற்றும் 2011ம் ஆண்டுகளில் சிறந்த ஒளிப்பதிவாளராக விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த ஒளிப்பதிவாளர் பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட நாட்டின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான முகமட் நோர் காசிம், தாமும் பரிந்துரையிலிருந்து விலகிக் கொள்வதாகமுகநூல் வாயிலாக அறிவித்துள்ளார்.
முகமட் நோர், தனது முகநூலில் “28வது மலேசியத் திரைப்பட விழாவின் பரிந்துரையிலிருந்து நான் அதிகாரப்பூர்வமாக விலகிக் கொள்கிறேன். இதற்குப் போட்டி பயம் காரணமல்ல, விருதில் காணப்படும் இனவாதத்தைக் கடுமையாக எதிர்க்கவே இவ்வாறு செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
நன்றி: வணக்கம் மலேசியா