ராவல்பிண்டி:
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர் , சக பாகிஸ்தான் கைதிகளால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.
மும்பையைச் சேர்ந்த ஹமீது நேகல் அன்சாரி என்ற இந்தியர் கடந்த 2012-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இணையதளம் மூலம்  பழக்கமான ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண்ணை பார்ப்பதற்காக பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தான் செல்ல முயற்சித்ததாக அன்சாரி தெரிவித்தார்.
a
ஆனாலும் உரிய ஆவணம் இன்றி பாகிஸ்தானுக்குள் நுழைந்தார் என்று கூறி, பெஷாவர் மத்திய, சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு, கடுமையான குற்றங்கள் செய்யும் கைதிகள் அடைக்கப்படும் இருட்டு அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
ஹமீது நேகல் அன்சாரியை, சக பாகிஸ்தான் கைதிகள் அவ்வப்போது  கொடூரமாக தாக்கி வருகின்றனர். கொடூரமாக சித்திரவதை செய்கின்றனர்.  . இதை சிறை அதிகாரிகளும் தடுப்பதில்லை.  கடந்த சில மாதங்களில் மட்டும் மூன்று முறை அன்சாரி தாக்குதலுக்கு  ஆளாகி மருத்துவ சிகிச்சை பெற்றார்.
இந்த விஷயத்தை, அன்சாரியின் வழக்குரைஞர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றார். இதையடுத்து, நீதிமன்றம், அன்சாரிக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சிறைத்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளது.