💥பட்டபகலில் 3 பெண்களை கட்டிபோட்டு கொள்ளையடித்த வடஇந்திய கொள்ளையன்/ திருச்சியில் பட்டப்பகலில் பிரபல ரம்யாஸ் ஓட்டல் அதிபரின் மனைவி, மருமகளை கயிற்றால் கட்டிப்போட்டு 13 பவுன் நகை, ரூ.65 ஆயிரம் கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதனை போலீசார் தேடி வருகிறார்கள்.
💥திருவாரூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சங்கத்தினர் நடத்திய போராட்டத்தின் போது ஏற்பட்ட தகராறு காரணமாக கல்லூரிக்கு வரும் 8-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
💥மதுரை ஆயுதப்படை காவலர் ஜெயக்குமார் என்பவர் நேற்று நல்லாவில் ஆத்திக் குளத்தில் உள்ள அவரது வீட்டில் நல்லிரவு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் குடும்ப தகராரு காரணமாக மது போதையில் தற்கொலை செய்தாக தகவல் தள்ளாக்குலம் காவல் நிலையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
💥மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து புல்வாய் கரைக்கு அரசு பேருந்து சென்றதில் படியில் பயணம் செய்த ஒருவரை ஓட்டுனர் சேகரன் திட்டி கீழே இறக்கிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை புல் வாய் கரையில் இருந்து நாங்கூர் நோக்கி வந்த பேருந்தை ஒட்டி வந்த டிரைவர் சேகரனை 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். உடனே அங்கே வந்த கூட்டுறவு சங்க தலைவர ராமசுப்ரமணி தனது வாகனத்தில் ஏற்றி வந்து அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தார்.
💥ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயில் தேரோட்ட திருவிழா. ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயில் தேரோட்டம் இன்று காலை 8 மணியளவில் தொடங்கி மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் குவிந்துள்ளதால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
💥சிகிச்சை முடிந்து நடிகர் கமல்ஹாசன் வீடு திரும்பினார். சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து நடிகர் கமல்ஹாசன் வீடு திரும்பினார். கால் எலும்பு முறிவு காரணமாக கடந்த 3 வாரமாக அவர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
💥ஜம்மு-காஷ்மீரில் மொபைல் இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம். ஜம்மு-காஷ்மீர் மாநிலம், தோடா, பனிஹல் மற்றும் கிஷ்த்வார் ஆகிய மாவட்டங்களில் மொபைல் இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
💥இந்தியா-இலங்கை பாலத்தை குண்டு வைத்து தகர்ப்பேன்: இலங்கை எம்.பி.. ராமேஸ்வரம்-தலைமன்னார் பகுதிகளை இணைக்கும் விதமாக பாலம் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் இலங்கை எம்.பி. உதய கம்மன்பில. இப்பாலத்தால் இலங்கை வடக்கு மாகாணம் இந்தியாவின் தமிழ்நாடாக மாறிவிடும் என்கிறார். மேலும் இலங்கை சிங்களவர்களுக்கு தாய் நாடு இல்லாமல் போகும் என அவர் கூறியுள்ளார். பாலம் அமைந்தால் அதை குண்டு வைத்து தகர்ப்போம் என எச்சரிக்கை செய்துள்ளார் அவர்.
💥சிபிசிஐடி விசாரணை கோரி பியூஷ் மனுஷ் சேலம் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல். சிபிசிஐடி விசாரணை கோரி சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் சேலம் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த 8 ம் தேதி கைதான சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் சேலம் சிறையில் தாக்கப்பட்டதாக புகார் அளித்துள்ளார். மேலும் சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் உட்பட 20 பேர் தாக்கியதாக அவர் புகார் அளித்துள்ளார்.
💥அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக மு.க.ஸ்டாலினுக்கு விலக்கு. அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரிய வழக்கில் நேரில் ஆஜராக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் மனுவை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை விசாரணையை 19ம் தேதிக்கு ஒத்திவைத்தது. திண்டுக்கல்லில் 2013 ஜூன் 6ல் நடந்த கூட்டத்தில் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக வழக்கு போடப்பட்டது.
💥சார்க் நாடுகள் பயங்கரவாதத்தை ஆதரிக்க வேண்டாம் : ராஜ்நாத் சிங் வலியுறுத்தல். அனைத்து சார்க் நாடுகளிடமும் பயங்கரவாதத்தை மகிமைப்படுத்தவோ ஆதரிக்கவோ வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் கூறியுள்ளார்.
💥32 தமிழர்களை செம்மரம் வெட்ட சென்றதாக ஆந்திர அரசு கைது செய்ததற்கு வைகோ கண்டனம். 32 தமிழர்களை செம்மரம் வெட்ட சென்றதாக ஆந்திர அரசு கைது செய்ததற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். கூலி தொழிலாளர்களை கைது செய்வதை ஆந்திர அரசு கைவிட வேண்டும் என அவர் சேலத்தில் பேட்டியளித்தார். ஆந்திர சிறையில் உள்ள தமிழர்களை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். பாலாறு விவகாரம் தொடர்பாகவும் ஆந்திர அரசுடன் தமிழக அரசு பேச்சு வார்த்தை நடத்த வைகோ வலியுறுத்தியுள்ளார்.
💥மும்பை – கோவா தேசிய நெடுஞ்சாலையில் பாலம் இடிந்து விபத்துக்குள்ளானதில் பலர் மாயமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் இன்னும் சில உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது வரை பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
💥ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு கடந்த சில நாட்களாக தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.,க்கள் பார்லி., வளாகத்தில் போராட்டம் நடத்தி நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இதே விவகாரம் தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான குழு இன்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளது.
💥உத்திரபிரதேசம் மாநிலம், கான்பூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள அனைத்து இந்திய விளையாட்டு வீரர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அதிகாலை முதல் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
💥வல்லூர் அனல்மின் நிலையத்தின் முதலாவது அலகில் 500 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.மின்நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 500 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
💥கிருஷ்ணகிரி தாசம்பட்டி அருகே ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால், சேலம் வழியாக சென்னை செல்லும் ரயில்கள் விருத்தாசலம் வழியாக இயக்கப்படுகின்றன
💥சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் கமல்ஹாசன் இன்று வீடு திரும்பினார். கால் எலும்பு முறிவு காரணமாக கடந்த 3 வாரமாக அவர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் குணமடைந்துசிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
💥ஜம்மு-காஷ்மீர் மாநிலம், தோடா, பனிஹல் மற்றும் கிஷ்த்வார் ஆகிய மாவட்டங்களில் மொபைல் இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
💥சென்னையிலிருந்து துபாய் செல்லும் விமானங்கள் 3வது நாளாக இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
💥பிரதமர் மோடியுடன் தமிழிசை சவுந்தரராஜன் சந்திப்பு. டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து பேசினார். குளச்சல் துறைமுகத்துக்கு அனுமதி தந்ததற்காக மோடியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
💥பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தாய் மற்றும் மகள் ஆகிய இருவருக்கும் தலா ரூ.3 லட்சம் மற்றும் தலா ஒரு வீடு இழப்பீடு வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.
💥மகதாயி நதிநீர்ப் பங்கீடு பிரச்னையைத் தீர்க்க பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் சித்தராமையா கேட்டுக் கொண்டார்
💥காந்தி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் புதிய முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்கான முக்கிய ஆலோசனைக் கூட்டம், இன்று நடைபெறுகிறது.
💥சத்தீஸ்கர் மாநிலம் தாண்டேவாடா மாவட்டத்தில் போலீசார்களுக்கும், நக்சல்களுக்கு இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 3 நக்சல்கள் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
💥தில்லியில் காவல் துறை அவசர வாகனம் (பிசிஆர்) வேன் மீது மோதிவிட்டு சென்ற காரின் ஓட்டுநரை விரட்டி, துப்பாக்கிச் சூடு நடத்தி போலீஸார் பிடித்தனர்.
💥கடந்த 2004ம் ஆண்டு மியூசியத்திலிருந்து திருடு போன ரவீந்திரநாத் தாகூரின் நோபல் பரிசை கண்டுபிடிக்க மேற்கு வங்க அரசு தயாராக உள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
💥30 வயதுடைய போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர், நேற்று மாலை டெல்லி மெட்ரோ ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
💥உத்தரகண்ட் மாநிலம், பேகேஸ்வர் மாவட்டத்திலுள்ள, சரயு ஆற்றில் 2 குழந்தைகள் அடித்துச் செல்லப்பட்டனர். இதனையடுத்து தேடுதல் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
💥படகு பழுதானதால் நடுகடலில் தவித்த தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை மீட்டுள்ளது. புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேரை இலங்கைக்கு அழைத்து சென்று படகை சரிசெய்து தமிழகத்திற்கு திருப்பியனுப்பியுள்ளனர்
💥வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில், கலெக்டர் பிரபாகர் தலைமையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், வளர்ச்சி பணிகள் குறித்து நேற்று ஆய்வு செய்தார்.
💥மும்பை – கோவா தேசிய நெடுஞ்சாலையில் பாலம் இடிந்து விபத்துக்குள்ளானதில் பலர் மாயமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில் இன்னும் 42 பேர்கள் மாயமாகியுள்ளதாக மகாராஷ்டிரா முதல்வர் சட்டசபையில் நேற்று கூறியுள்ளார். மீட்பு பணிகள் தொடர்ந்து அப்பகுதியில் நடைபெற்று கொண்டு இருக்கிறது.
💥சென்னை பல்கலையின், 125 இணைப்பு கல்லுாரிகள் மற்றும் பல்கலையின் நேரடி மாணவர்களுக்கு, சிறப்பு குறைதீர் முகாம், பல்கலை வளாகத்தில் நாளை நடக்கிறது. தொலைநிலை கல்வி மாணவர்கள், கல்லுாரி மாணவர்கள், பல்கலையின் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் உள்ளிட்டோர் இந்த முகாமில் பங்கேற்கலாம். அதற்கு முன் குறை தொடர்பாக, பல்கலையின் இணையதளத்தில் பதிவு செய்ய, மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, மாணவர்கள் நேரடியாக முகாமுக்கு வந்து, சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள், சிக்கல்கள், மாணவர் சேர்க்கையிலுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம் என, பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
💥செய்யாறு அருகே அரசு பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். அரசு பேருந்தும் இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த மருகன், சேட்டி ஆகிய 2 பேரும் உயிரிந்தனர்.
💥103 அடி உயரமுள்ள கம்பத்தில் 36 அடி நீளம், 24 அடி அகலம் கொண்ட தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.நீலகிரி, குன்னூர்ம் வெலிங்க்டன் போர் நினைவு தூண் அருகே இந்த கொடிக்கம்பம் நிறுவப்பட்டுள்ளது.15ம் தேதி கொண்டாடப்படவுள்ள சுதந்திர தின விழாவைச் சிறப்பிக்கும் வகையில் பட்டொளி வீசி பறக்கிறது மூவர்ண கொடி.
💥கபாலி’ திரைப்படத்தின் பாக்ஸ் ஆஃபீஸ் விரைவில் ₹700 கோடியை நெருங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவில் 700 கோடியை வசூலித்த ஒரே படம் ஆமீர் கானின் ‘பி.கே’. அப்படம் 24 நாட்களில் ₹625 கோடிதான்; கபாலி 14 நாட்களில் ₹650 கோடியைத் தாண்டிவிட்டது.
💥காஞ்சிபுரம் – படப்பை – ஆரம்பாக்கம் – கண்ணாடி பிரேம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் லோடு ஏற்றி செல்வதற்காக நேற்று மாலை முதல் காத்திருந்த புளியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் தேவராஜ் இரவு நேரம் அசந்து லாரியில் தூங்கும் போது லாரி தீ பிடித்து முழுவதும் எரிந்ததில் தேவராஜ் உடல் கரிகட்டையாகி சம்பவ இடத்திலேயே பலி. மணிமங்கலம் போலீஸார் விசாரணை
💥காஞ்சிபுரம் – செங்கல்பட்டு – திம்மாவரம் பகுதியை சேர்ந்த திருமணமான சரஸ்வதி என்ற பெண்ணை பலவந்த படுத்த முயற்சி. சம்மதிக்காததால் கத்தியால் குத்திவிட்டு அதே பகுதியை சேர்ந்த காமுகன் தப்பி ஓட்டம். செங்கல்பட்டு தாலுக்கா போலீஸார் விசாரணை
💥காஞ்சிபரம் அடுத்த ஆக்கூர் சாலையில் இருசக்ர வாகனத்தில் சென்ற உக்கல் பகுதியை சேர்ந்த முருகன் மற்றும் சேட் என்பவர்கள் மீது அரசு பேரூந்து மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலி. தூசி போலீஸார் விசாரணை
💥விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் துரைசாமிபுரம் செங்குட்டுவன் தெருவில் செந்தில்குமார் என்பவர் தன் மனைவி சங்கரேஸ்வரி, 6 வயது மகள் தேவதர்ஷினி என குடும்பத்துடன் தற்கொலை.
💥பழனி தாலுகா அலுவலகம் முன்பு மாற்றத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் : 40 சதவிதத்திற்கு மேல் உள்ள மாற்றத்திறனாளிகளுக்கு நிபந்தனமின்றி மாதாந்திர உதவித்தொகை வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வழியுறித்தி ஆர்ப்பாட்டம்
தங்கம் விலை சற்று உயர்வு
22 கேரட் தங்கம் ஒரு கிராம் – ₹3001.00
22 கேரட் தங்கம் ஒரு சவரன் – ₹24,008.00
24 கேரட் தங்கம் 10 கிராம் – ₹25,680.00
வெள்ளி: ஒரு கிராம் – ₹52.50
வெள்ளி கட்டி: ஒரு கிலோ – ₹49,08