சென்னை:
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இலவச வைபை இணைய வசதி இன்று தொடங்கப்பட்டது

இந்திய ரெயில்வே துறை சார்பில் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் அதிநவீன வை-பை இணைய வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த மேம்படுத்தப்பட்ட அதிவேக இலவச ‘வை–பை’ சேவையை மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார்.
அதையடுத்து ‘ஆயூஷ்’ திட்டத்தின்படி பெரம்பூர் ரெயில்வே மருத்துவமனையில் மரபு சார்ந்த மருத்துவ சேவை வசதியையும் வீடியோ காண்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.
விழாவில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஜெயக்குமார், மேயர் சைதை துரைசாமி மற்றும் எ.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Patrikai.com official YouTube Channel