டில்லி:
குழந்தை தொழிலாளர் சட்ட திருத்தத்தை இன்று பாராளுமன்றத்தில் மத்திய பாஜக அரசு நிறைவேற்றியது. இந்தத் திருத்தம் 14 வயதுக்கும் குறைவான குழந்தைகள் தொழிலாளியாக வேலை வாங்கப்படுவதை அனுமதிக்கிறது என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
குழந்தை தொழிலாளர் சட்ட திருத்தத்தை இன்று பாராளுமன்ற மேலவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்ரேயா அறிமுகப்படுத்தினார்.
.இந்திய தொழிலாளளர் நலச்சட்டம் 1986ன் படி 14 வயதுக்கு குறைவானவர்கள் அனைவரும் குழந்தைகள். இவர்களை எந்தவித தொழிலும் செய்ய அனுமதிக்கக்கூடாது.
ஆனால் இன்று கொண்டுவரப்பட்டுள்ள இந்த சட்டத் திருத்தத்தின்படி 14 வயது குறைவாக உள்ள குழந்தைகள் எந்த தொழிலும் செய்ய அனுமதிக்கக்கூடாது. ஆனால் இன்றைய சட்டத்தில் சில ஓட்டைகள் இருப்பதாகவும், அதனால் குழந்தைத் தொழிலாளர் முறை ஊக்குவிக்கப்படும் என்றும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் விவேக் குப்தா பேசும்போது, “விவசாய குடும்பத்தினரின் குழந்தைகள், உரங்களை விவசாய பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தும் போது அதிலுள்ள ரசாயணத்தால் பாதிக்கப்படுவ தாகவும், குடும்பத்தோடு பீடி சுற்றும் தொழில், கார்பெட் தயாரிக்கும் தொழில் செய்பவர்களை இந்த சட்டத்தால் எதுவும் செய்ய முடியாது” என்றார்.
ஆனாலும் குரல் ஓட்டெடுப்பு மூலம் இந்த சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டது.