download
கபாலி நியூஸ்: 1:
ரஜினிகாந்த் நடித்து உலகம் முழுவதும் வரும் 22-ஆம் தேதி  வெளியாக இருக்கும் கபாலி திரைப்படத்திற்குதமிழகம் முழுவதும் முன்பதிவுகள் துவங்கிவிட்டன. பெரும்பாலான தியேட்டர்களில் ரசிகர்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் முன்பதிவு செய்தனர். அதே நேரம் பெரும்பாலான டிக்கெட்டுகள் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டன.  தற்போதைய நிலவரப்படி முதல் மூன்று நாட்களுக்கான டிக்கெட் விற்று தீர்ந்துவிட்டது.
கபாலி நியூஸ்: 2:
மலேசியா, சிங்கப்பூர் உட்பட உலகம் முழுதும் கபாலி வெளியாகிறது அல்லவா. இதில் மலேசியாவில் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களும், சிங்கப்பூரில் 18 வயதுக்குட்பட்டவர்களும் பார்க்க தடை விதிக்கப்பட்டிருப்க்கிபாதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கபாலி படத்தில் மிக அதிக அளவில் வன்முறை காட்சிகள் இருப்பதால் அந்நாட்டு அரசுகள் இந்நடவடிகையை எடுத்துள்ளன. இந்தியாவில் கபாலி படத்தை அனைவரும் பார்க்கலாம்.

[youtube-feed feed=1]