சென்னை:
மிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பரபரப்பு கடிதம் எழுதி உள்ளார்.
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலுக்கு பின்னர்  காங் மேலிடம் வேண்டுகோளுக்கு இணங்க தமிழக காங்கிரஸ் பதவியை இளங்கோவன் ராஜினாமா செய்தார்.  ஆனால் 2 மாதங்கள் கடந்ததும் காங்கிரஸ் மேலிடம் தமிழக   காங்கிரசுக்கு தலைவரை நியமிக்க முடியாமல் தள்ளாடுகிறது.
இந்த  இக்கட்டான   சூழ்நிலையில், காங்கிரஸ் மேலிடமான   சோனியாவுக்கும், ராகுலுக்கும், இளங்கோவன் பரபரப்பு   கடிதம் எழுதி  உள்ளார்.

சிதம்பரம் திருநாவுக்கரசு இளங்கோவன் குஷ்பு
     சிதம்பரம்                        திருநாவுக்கரசு    இளங்கோவன்       குஷ்பு

அதில், தமிழக காங்., தலைவர் பதவிக்கு கடும் போட்டி காணப்படுகிறது. இதில், எந்த விதத்திலும் திருநாவுக்கரசரை தலைவராக நியமிக்காதீர்கள். அவரை, ஒரு காங்கிரஸ்காரராகவே கட்சியினர் ஏற்றுக் கொள்ளவில்லை. அ.தி.மு.க.,வுக்கு துரோகம் செய்த  அவர், தனி கட்சி துவங்கினார். அதையும் மூடிவிட்டு, பா.ஜ.,வில் இணைந்தார். அதில், எம்.பி., மற்றும் அமைச்சர் என, பதவிகளை அனுபவித்து விட்டு, அக்கட்சிக்கும் துரோகம் செய்து, காங்கிரசுக்கு வந்தார். அவர் எந்த விதத்திலும், காங்கிரசுக்கு நன்மை செய்யப் போவதில்லை.
அதேபோல், முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், அறிவாற்றல் மிக்கவர்; அதில், எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், சாதாரண தொண்டர்களால், அவரை எளிதாக சந்திக்க முடியாது; தொண்டர்களையும் அவர் அருகில் சேர்த்துக் கொள்ள மாட்டார். ‘மேல் தட்டு அரசியல்வாதி’ என, பெயரெடுத்தவரால், கட்சியை அடிமட்ட அளவில் வளர்க்க முடியாது.
எனவே, இந்த இருவரையும் தவிர்த்து, வேறு ஒருவரை நியமியுங்கள். பீட்டர் அல்போன்ஸ், சுதர்சன நாச்சியப்பன் போன்றவர்கள், அடிமட்டத்தில் இருந்து வளர்ந்து வந்தவர்கள். அவர்களில் ஒருவரை நீங்கள் நியமித்தால், என்னுடைய ஆதரவு மட்டுமல்ல, ஒட்டுமொத்த காங்கிரசாரின் ஆதரவும் அவர்களுக்கு கிடைக்கும் என்று கடிதத்தில் எழுதி உள்ளார்.
ஆனால் டெல்லி மேலிடம் குஷ்புவை தலைவராக முயற்சி செய்வது பற்றி பத்திரிகைகளில் செய்தி வந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் இளங்கோவனின் கடிதம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடிதத்தில் எந்த இடத்திலும் குஷ்புவை ஆதரிப்பதாக அவர் தெரிவிக்கவில்லை. எனவே குஷ்பு தலைவராதை இளங்கோவன் விரும்பவில்லை என்றே தெரிகிறது.
பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் பதவிக்கு குஷ்பு வருவதை பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் விரும்பவில்லை என்பதை நாசுக்காக தன் கடிதம் மூலம் இளங்கோவன் டெல்லி மேலிடத்திற்கு அறிவுறுத்தியதாக தெரிகிறது.