மாஸ்கோ:
எஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அடியோடு ஒழிப்பது சம்பந்தமாக உச்சகட்ட தாக்குதல் நடத்துவது பற்றி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கெர்ரி 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

புதினுடன் ஜான் கெர்ரி
                                              புதினுடன் ஜான் கெர்ரி

சிரியாவில்  நடைபெற்று வரும் உள்நாட்டு போரால் சுமார் 12 ஆயிரம் குழந்தைகள் உள்பட இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர்.
சிரியா மக்களை கொடுமைப்பபடுத்தும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ம் தேதி ரஷியா முடிவு செய்து ஏராளமான ஆயுதங்களும், ரஷ்ய ராணுவ வீரர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று  விளாடிமிர் புதினுடன் கூறியிருந்தார்.
தீவிரவாதத்தை ஒழிக்கவே சிரியா அரசுக்கு ரஷியா ஆயுதங்களை அளித்தது என விளாடிமிர் புதின் கூறியிருந்தார். தற்போது  சிரியாவில்  உள்ள ஐஎஸ். தீவிரவாதிகள் மீது ரஷியாவுடன் இணைந்து அமெரிக்காவும் தாக்குதல் நடத்துவது தொடர்பாக  பேச  அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி மாஸ்கோ நகருக்கு வந்தார். ரஷிய அதிபரின் கிரெம்ளின் மாளிகையில் சுமார் 3 மணிநேரம் இருவரும் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.
ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகளை அடியோடு அழித்து,  அமைதியை நிலைநாட்டும் வகையில் அமெரிக்காவும், ரஷியாவும் அங்கு தனித்தனியாக தலைமை செயலகங்களை நிறுவவும், உளவு தகவல்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதன் மூலம்  தீவிரவாதிகள் மீது உச்சகட்ட தாக்குதலை அடியோடு ஒழிக்க  இருநாடுகளும் ஒருமித்த கருத்துடன் இணைந்திருப்பது என்று இந்த ஆலோசனை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக தெரிகிறது.