புதுடெல்லி:
தமிழக முதல்வர் ஜெயலலிதான மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாகும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இறுதி வாதம் ஏற்கனவே முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்தியாவே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இந்த பரபரப்பான வழக்கில் கர்நாடக அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா, திமுக அன்பழகன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அந்தி அர்ஜூனா, தமிழக முதல்வர் ஜெயலலிதா, தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் எல்.நாகேஸ்வரராவ், சேகர் நாப்டே ஆகியோர் வாதாடினர். கடைசியாக ஜூன் 1ந்தேதி இறுதி வாதம் நடைபெற்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையில் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வரும் 19ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் வெளியாகிறது என டெல்லியில் பரவலாக பேசப்படுகிறது.
இதன் காரணமாகவே முதல்வர் ஜெயலலிதா, டெல்லி மாநில முதல்வர் கவுன்சில் கூட்டத்தை புறக்கணித்ததாகவும், தீர்ப்பு எப்படி இருக்குமோ என அதிர்ச்சியில் உள்ளதாகவும் போயஸ் தோட்ட வட்டாரங்கள் தெரிவிக்கிறது.