ஆறு ஆண்டுகள் பதவியில் இருந்த பிறகு, இன்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் பதவி விலகுகிறார்
- ஐ.நாவின் அடுத்த தலைமைச் செயலருக்கான தேர்தலில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வரும் நோக்கில், முன் எப்போதும் இல்லாத வகையில் வேட்பாளர்களான 12 பேரில் 10 பேர் உலக அளவில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்றனர்.
- பிரேசிலின் மத்திய அரசு, அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டிகளின் பாதுகாப்பை வலுப்படுத்த, ராணுவப் படைகளுக்கு மேலும் 24 மில்லியன் டாலர்களை ஒதுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
- இலங்கையின் புகழ் பெற்ற தமிழ் திரைப்பட மற்றும் நாடக எழுத்தாளரும், நடிகருமான மரிக்கார் எஸ்.ராம்தாஸ் தனது 69வது வயதில் சென்னையில் காலமானார்.
- தெற்கு இத்தாலியில் செவ்வாய்க்கிழமையன்று, 23 பேரை பலிவாங்கிய ரயில் விபத்தின் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
- எகிப்திய ஆட்சியாளர்கள், எதிராளிகளை அச்சுறுத்த மற்றும் அவர்களை தங்கள் கருத்துக்கு இணங்கச் செய்ய மக்களை வலுக்கட்டாயமாகக் காணாமல் போகச் செய்ய வைப்பதாக, சர்வதேச மனித உரிமை அமைப்பான, அம்னெஸ்டி இண்டர்நேஷனல் குற்றம் சாட்டியுள்ளது.
- அமெரிக்கர்கள் இனப் பிரச்சனை குறித்த பதற்றங்கள் பற்றி விரக்தியடையும் மனோநிலையை நிராகரிக்குமாறு அதிபர் ஒபாமா வலியுறுத்தியிருக்கிறார்.
- பாலியல் பலாத்காரக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்களைக் கட்டாயமாகத் திருமணம் செய்து கொண்டு தப்பித்துக் கொள்கிறார்கள் என்றுதுருக்கியில் நாட்டின் உச்சநீதிமன்றம் வருத்தம் தெரிவித்துள்ளது.
- மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள பொட்டுலுப்பட்டியைச் சேர்ந்த மலைராஜா மற்றும் சாவித்திரி தம்பதியரின் 13 வயது மகள் உசிலம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இவர் பள்ளிக்குச் சென்றுவரும்போது, அதே பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் தவக்காசெல்வம், மாணவியை பின்தொடர்ந்து தன்னை காதலிக்க வற்புறுத்தியுள்ளார். இதுகுறித்து மாணவி தன் பெற்றோரிடம் தெரிவித்தார்.
- இதனையடுத்து தவக்காசெல்வத்தின் பெற்றோரிடம் மாணவியின் பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் தவக்காசெல்வத்தின் தாய் வைரமணி தன்னுடைய மகனை கண்டிக்காமல், காதலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்நிலையில், திங்கள் கிழமை பள்ளிக்குச் சென்ற மாணவியிடம், திருமணம் செய்துகொள்ளாவிட்டால் கொலை செய்துவிடுவதாக தவக்காசெல்வம் அவரது தாயும் சேர்ந்து மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக, சாவித்ரி அளித்த புகாரின் பேரில் உசிலம்பட்டி தாலுகா காவல்துறையினர், தவக்காசெல்வத்தை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் அவரது தாய் வைரமணியைத் தேடிவருகின்றனர்.
- சிவகங்கை மாவட்டத்தில் மாமியார் மருமகள் சேர்ந்து ஒரு பெண்ணை தாக்கியதில், அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
- வாலிபர் ஒருவர் 11 வயது மாணவியை கொலை செய்து புதைத்து விட்டு, தானும் தற்கொலை முயற்சி செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறை விசாரணையில் அந்த வாலிபர், சிறுமிக்கு அண்ணன் உறவு முறை என்பதும், தனது ஆசைக்கு இணங்காததால் கொலை செய்ததாகவும் தெரியவந்துள்ளது…..சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள கணபதியேந்தலை
- இந்திய போஸ்ட் வங்கி அடுத்த ஆண்டில் செயல்பாட்டுக்கு வருகிறது என்றும், தமிழகத்தில் முதல் வங்கி ஜார்ஜ்டவுன் தபால் அலுவலகத்தில் அமைகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- பாசனத்துக்காக பெரியாறு அணை நாளை திறப்பு
- கபாலி’யின் தமிழக வினியோக உரிமையை வாங்கியது சசிகலாவின் ‘ஜாஸ்’
- சென்னை உயர் நீதிமன்றத்தில் விலங்குகள் நல ஆர்வலர் ராதாராஜன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கடந்த 2008-ம் ஆண்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் சட்டத்தின் படி இறைச்சிக்காக வெட்டப்படும் விலங்குகளின் பெயர் பட்டியலில் ஒட்டகம் இடம் பெறவில்லை. ஆனால் பக்ரீத் பண்டிகை காலங்களில் ஒட்டகங்கள் இறைச்சிக்காக கொண்டு வரப்படுகின்றது. இது குறித்து நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. எனவே இறைச்சிக்காக ஒட்டகங்கள் வெட்டுவதற்கு தடைவிதிக்க வேண்டும். என்று மனுவில் கூறியிருந்தார்.
- இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டது.
- நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு இறுதி கால அவகாசம் அளிக்கப்படுகிறது. மீறினால் மத்திய அரசின் உணவு பாதுகாப்பு துறை இணை செயலாளர் நேரிடும் என எச்சரிக்கிறோம். மேலும் மத்திய மாநில அரசுகள் கீழ்கண்ட கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். இறைச்சிக்கான விலங்குகள் பட்டியலில் ஒட்டகம் இடம் வெற்றுள்ளதா? ஒட்டகங்கள் வெட்ட அனுமதி உள்ளதா? சென்னை மாநகராட்சி சட்டத்தின் அடிப்படையிலும் மத்திய விலங்குகள் வதை தடுப்பு சட்டத்திற்கு உட்பட்டு எந்த இடங்களில் ஒட்டகம் வெட்டப்படுகிறது. அவ்வாறு ஒட்டகங்கள் வெட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்விகளுக்கு ஆகஸ்ட்டு 18-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள்
- நடுக்கடலில் மீனவர்கள் தத்தளிப்பு
- புதுக்கோட்டை அய்யம்பட்டினத்தில் இருந்து நாட்டுப்படகில் மீன் பிடிக்கச்சென்றவர்கள் நடுக்கடலில் தத்தளித்தனர்.
- அய்யம்பட்டினத்தில் இருந்து 17 நாட்டுக்கல் மைல் தூரத்தில் நாட்டுப்படகில் பழுது ஏற்பட்டதாக தகவல். கடலில் தவிக்கும் 4 மீனவர்களை மீட்க கடலோர காவல்படையினர் விரைந்தனர்.
- காவலர் சங்கத்திற்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி
- இரட்டைக்கொலை வழக்கில் சகோதரர்கள் கைது
- நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பேருந்து நிலையத்தில் ஓடும் பேருந்தில் 2 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.
- தடையை மீறி ஆர்பாட்டம் செய்ய முயன்ற சையத் அலி ஷா கிலானி கைது
- கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான உம்மன் சாண்டி முதல்-மந்திரியாக இருந்த போது விவசாயத்துறை மந்திரியாக இருந்தவர் கே.பி.மோகனன் இவர் தற்போது மீண்டும் பத்திரிக்கையாளர் பணிக்கு திரும்பி உள்ளார்.
- உத்தர பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியில் பெண் அடித்து கொலை:6 பேர் படுகாயம்
- ஜனநாயகம் குறித்து பிரதமருக்கு விளக்கமளித்த சுப்ரீம் கோர்ட்டிற்கு நன்றி என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறிஉள்ளார்.
- அருணாச்சல பிரதேசத்தில் ஆட்சியை ரத்துசெய்ய கவர்னர் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியதால் ஜனாதிபதி ஆட்சி விவகாரத்தில் மீண்டும் காங்கிரஸ் வெற்றிப்பெற்று உள்ளது.
- மோடிஜி, காஷ்மீருக்கு கண் மற்றும் அதிர்ச்சிக்கு சிகிச்சை அளிக்கும் நிபுணர்களை அனுப்புங்கள் – உமர் அப்துல்லா கோரிக்கை
- பர்கான் வானியை ஹீரோவாக சித்தரிக்கும் மீடியாக்கள்: பிரதமர் மோடி கவலை
- குஜராத் ஜூனாகத் பகுதியில் சாலைகளில் ”ஹாயாக உலா வரும் சிங்கங்கள்” பீதியில் மக்கள்
- ஆஸ்திரேலியாவில் ஆலிஸ் ஸ்பரிங் பாலைவனப் பூங்காவில் வன விலங்குகள் கண்காட்சி நடந்தது. அதை கண்டு களிக்க ஏராள மானோர் கூடியிருந்தனர் அப்போது அங்கு அசுர வேகத்தில் பறந்து வந்த ஒரு கழுகு தனது கூரிய கால்களின் நகங்களால் ஒரு சிறுவனை தூக்கி செல்ல முயன்றது.
- ஜுலை 15ல் முதல்வர் ஜெ.வை சந்திக்கிறார் பியூஸ் கோயல்
- மதுராந்தகம் அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை
- புதுவையில் பணி நீக்கம் செய்யப்பட்ட பொதுப்பணித் துறை ஊழியர்கள் கடலில் இறங்கிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். பணி நீக்கம் செய்யப்பட்ட 2612 பேருக்கும் மீண்டும் வேலை வழங்கக் கோரி போராட்டம் நடத்துகின்றனர்
- அரியலூர் மாவட்டத்தில் பெண் உள்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது
- கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி அகமதாபாத்தில் கைது
- சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் ஸ்ரீவில்லிபுத்தூர் நிதிமன்றத்தில் ஆஜர்
- கிருஷ்ணகிரி அருகே வீட்டில் 4 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்
- சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 குறைவு
- துரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர் பகுதியில் கூட்டுறவு வங்கியை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், மதுரையில் மட்டும், சிறு குறு விவசாயிகளின் ரூ.131.09 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றார்.