பெண்கள்  ஒரு குழந்தையை பிரசவிப்பதென்பது மறுஜென்மம் எடுப்பதாகும் என சொல்லப்படுவதுண்டு. ஏனெனில் அதற்காக அவர்கள் அனுபவிக்கும் வேதனை அதிகம்.
இந்தக் காலத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தவுடன் பென்ணிற்கு குடும்பக் கட்டுப்பாடு செய்துவிடுவது வாடிக்கையாகிவிட்டது. பெண் குழந்தை பிறந்தால் மட்டுமே அடுத்து ஆண் குழந்தை பிறக்கும் வரை தொடர்ந்து குழந்தை பெற்றுக் கொள்பவர்களைப் பார்த்திருக்கின்றோம்.
அதுவும், தற்பொழுதைய பள்ளிக் கல்விக்கட்டணத்தை பார்த்தே இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணத்தை கைவிட்டவர்கள் அதிகம்.
101 17th kid
ஆனால் இத்தாலியைச் சேர்ந்த அனடோலியா வெர்டடெல்லா எனும் 101 வயதுப் மூதாட்டி துருக்கியில் கருப்பை மாற்று சிகிச்சை முறையில் குழந்தையை பெற்றுள்ளார்.
இவருக்கு முன்னர் இந்தச் சாதனைக்கு சொந்தக் காரர், தென்னாப்பிரிகாவைச்  சேர்ந்த மலெக்வானே ரமோக்கோபா என்பவர் ஆவார்.
1893 பிறந்த அவர் தமது 92 வயதில் இரட்டை குழந்தைகளைப் பெற்றது நாளிதழ்களில் வந்து பிரபலமடைந்தது.
ஏற்கனவே  16 குழந்தைகளுக்கு தாயான இவர், தமது 48வது வயதில் கற்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் மேற்கொண்டு குழந்தைப் பெற்றுக் கொள்ள முடியாத வருத்தத்துடனே வாழ்ந்து வந்தார். இந்நிலையில், கருப்பை மாற்று சிகிச்சை மூலம் இவர் 17-வது குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
இத்தாலியில் இவ்வாறு  குழந்தைப்பெறுவதில் சட்டச்சிக்கல் இருந்ததால் துருக்கிக்கு சென்று அங்கு சட்டப்படி  சிகிச்சை பெற்று இந்தக் குழந்தையைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் எங்கு சிகிச்சை பெற்றார் என்பதை வெளியிட  மறுத்துவிட்டார். இவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மூதாட்டி நல்ல உடல்நிலையுடன் உள்ளார், அவரால் கண்டிப்பாக பல ஆண்டுகளை குழந்தையுடன் கழிக்க முடியும் எனத்தெரிவித்துள்ளனர்.
1998ல் இவரது கணவர் மரணமடைந்துவிட்டதால், 26 வயதான  ஒருவரின் விந்தினை தானமாகப் பெற்று இந்த குழந்தையை பெற்றுள்ளார்.
இந்த மூதாட்டி, தற்பொழுது நான்கு  கிலோ எடையுடன் பிறந்தக் குழந்தையுடன் மகிழ்ச்சியுடன் உள்ளார் . இந்தக் குழந்தைக்கு  பிராஸ்சிஸ்கோ எனப்  பெயரிட்டுள்ளார்.
 
தகவல் நன்றி