மும்பை:
மீபத்தில் வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் புலனாய்வு செய்த அந்நாட்டு அதிகாரிகள், “ஐ.எஸ். பயங்கரவாத இணையதளமும், இந்தியாவில்  ஜாஹீர் நாயக் நடத்திவரும்  பீஸ் டிவி (Peace  tV )  பிரச்சாரங்களுமே இளைஞர்களை பயங்கவாதிகளாக திசை மாற்றியிருக்கின்றன” என்று தெரிவித்திருக்கிறார்கள்.
மும்பையை தளமாகக் கொண்டு செயல்படுகிறது இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேசன். இதன் நிறுவனரான ஜாஹீர் நாயக், “இஸ்லாமிய மதத்தை அமைதியாக  பிறருக்கு விளக்கும் பணியை செய்வதாக சொல்லிவருகிறார். இவர் பீஸ்டிவி ((Peace  tV )  ) என்ற  இஸ்லாமிய மதப் பிரச்சார தொலைக்காட்சி ஒன்றையும் நடத்தி வருகிறார்.
imagesஇந்தத் தொலைக்காட்சியில் பயங்கவாதத்தை ஆதரித்து தொடர்ந்து பிரச்சாரம் செய்துவருகிறார் ஜாஹீர் நாயக். இவரது பிரச்சார பேச்சைக் கேட்டு பல இளைஞர்கள் பயங்கரவாதிகளாக மாறிவருகிறார்கள். சமீபத்தில் தேசிய பாதுகாப்பு படை (ஐ.என்.ஏ.) ஹைதரபாத்தில் ஐ.எஸ். பயங்கராவாதிகள் சிலரை கைது செய்தது. இவர்கள் அனைவருமே ஜாஹிர் நாயக்கின் தீவிரவாத பேச்சைக்கேட்டு பயங்கரவாதிகளாக மாறிய இந்திய இளைஞர்கள்தான். இந்த தகவலை ஐ.என்.ஏ. ஏற்கெனவே கூறியிருக்கிறது.
”பிரிட்டன், கனடா, மலேசியா ஆகிய நாடுகள்,  ஜாஹீர் நாயக்,  தங்கள் நாட்டுக்குள் வரக்கூடாது என தடை விதித்திருக்கின்றன. ஆனால் இந்தியாவில் இவருக்கு எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை.  சுதந்திரமாக நாடு முழுதும் உலாவருகிறார்.”   என்று சமூக ஆர்வலர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

பீஸ் டிவி
பீஸ் டிவி

இது குறித்து மத்திய அரசு வட்டாரத்தில் கேட்டபோது, “ஒரு அமைப்பாக இருந்தால்  தடை செய்யலாம். அவர் தனி மனிதராக செயல்படுகிறார். ஆகவே தடை செய்ய முடியாது” என்று தெரிவித்தனர்.
அதே நேரம்ஜா, “ஹீர் நாயக்கை கைது செய்து, அவரது பீஸ் டிவியை முடக்க வேண்டும்” என்ற கோரிக்கை எழுந்துள்ளது.