junO
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா $ 1.1 பில்லியன் (£ 830 மில்லியன்) செலவில் சூரிய மண்டலத்தின் தோற்றம் பற்றி ஆய்வு செய்யும் நோக்கத்துடன் “ ஜூனோ” எனும் விண்கலத்தை வியாழன் கோளுக்குச் செல்ல, ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் விண்ணில் ஏவியிருந்தது, அந்த ஜூனோ விண்கலம் வியாழன் கோளின் சுற்றுப்பாதையில் இன்று (செவ்வாயன்று) வெற்றிகரமாக நுழைந்தது. இந்த முக்கிய வெற்றியை நாசா கொண்டாடியுள்ளது.
பூமியிலிருந்து சுமார் 2 பில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஜூபிடருக்குப் பயணிக்க ஜூனோவுக்கு ஐந்து ஆண்டுகள் பிடித்துள்ளது குறிப்பிடத் தக்கது.
இந்தியாவில் ஸ்ரீஹரிக்கோட்டாவை போன்று கேப் கனவேரல், புளோரிடா எனும் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஜூனோ ஏவுகணை ஏவப்பட்டது. அதன் பின்னர் 1.7 பில்லியன் மைல்கள் பயணம் செய்துள்ளது.
இந்த ஜூனோ அடுத்த 18 மாதங்களில், வியாழன் கோளின் தன்மையை ஆய்வு செய்யும்; ஒரு கட்டத்தில் அது ஜூபிடரின் மேகங்களுக்குள் சுமார் 5,000 கிமீ உயரத்திற்குள் மிதந்து கொண்டிருக்கும். பின்னர் அது ஜூபிடரின் சூழலுக்குள் குதித்து தன்னைத்தானே அழித்துக்கொள்ளும்.
அமெரிக்காவின் விண்வெளி ஏவும் மையமான கலிபோர்னியாவின் பசடேனாவில் உள்ள ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் இலக்குப் படி வியாழனின் வட்டப்பாதையில் நுழைந்த  ஜுனோவின் வெற்றியினால் மகிழ்ச்சிவெள்ளத்தில் மூழ்கினர்.
டெக்சாஸ் தென்மேற்கு ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்தவரும், நாசாவின் தலைமை ஆய்வாளருமான ஸ்காட் போல்டன், “ நாம் வெற்றியடைந்து விட்டோம், ஜுனோ வியாழன் வட்டப் பாதையில் நுழைந்துவிட்டது. இதுவரை நாசா செய்திராத அரிய காரியத்தை நீங்கள் நடத்திக் காட்டியுள்ளீர்கள். நீங்கள் தான் நாசாவின் சிறந்த பணியாளர்கள் எனச் சக ஊழியர்களைப் பாராட்டியுள்ளார்.
மேலும், நாம் “நாம் இயற்கை குறித்தும், வியாழன் கோள் உருவாக்கப்பட்டது எப்படி மற்றும் நாம் எங்கிருந்து வந்தோம் ஆகிய வரலாறு கற்றுக்கொள்ளவுள்ளோம்,” என போல்டன் கூறினார்.
சூரிய மண்டலத்தில் மிகப் பெரிய கிரகமும், சூரியனிலிருந்து ஐந்தாவதாய் இருக்கும் வியாழனின் சுற்றுவட்டப்பாதையில் தனது முதல் சுற்றினை முடிக்க ஜுடோவிற்கு 53 நாட்கள் ஆகும். அதைத் தொடர்ந்து வட்டப் பாதையில் அளவு குறைவாக இருக்கும்.
நாஸாவின் கணக்குப்படி, ஜூனோ வருகின்ற ஆகஸ்ட் 27, அன்று அதன் அறிவியல் உபகரணங்களை சோதனை ஓட்டமாய் திறந்து வியாழன் கோளின் முதல் நெருக்கமான படங்களை எடுத்து அனுப்பும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இதற்கு முன்னர் கலிலியோ எனும் விண்கலம் மட்டும் தான் வியாழன் கோளினை சுற்றி வந்துள்ளது.
67 நிலவுகளைக் கொண்ட வியாழன் கோளினை கலிலியோவை விடச் சிறப்பாய்  இந்த ஜூனோ வட்டமிடும் என்றும் இன்னும் பல புதிய விசயங்களைக் கண்டறிய வாய்ப்பு உள்ளது என போல்டன் கூறினார்.
ஏற்கனவே ஏழு அமெரிக்க விண்வெளி ஆய்வு சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற இடங்களில் செல்வதற்கு முன் சுருக்கமாக வியாழன் கோளின் சுற்றுப்பாதையில் கடந்துள்ளது.
இந்த விண்கலத்தில் செயல்பாட்டில் ஆபத்துக்கள் சூழ்ந்துள்ளது. ஜூனோ வியாழனின் மேகங்கள் டாப்ஸ் 3,000 மைல் தூரத்தில் கிரகத்தில் சக்திவாய்ந்த கதிர்வீச்சு பெல்ட்கள் உள்ளே அனுப்ப வேண்டும் என்று மிகவும் நீள் சுற்றுவட்டப் பாதைகள் பறந்து விடும்.
ஜூனோவின் கணினிகள் மற்றும் முக்கிய அறிவியல் கருவிகள் பாதுகாப்பாய் ஒரு 400 பவுண்டு டைட்டானியம் பெட்டகத்தின் உள்ளே வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் வியாழனைச் சுற்றி அதன் 37வது வட்டப் பாதையில் உள்ள போது, வியாழன் கோளிலிருந்து 100 மில்லியன் எக்ஸ் கதிர்கள் வெளிப்படும், அதனை ஜுனோ எதிகொள்ளவேண்டியுள்ளது. என இக்குழுவின் கதிர்வீச்சு கட்டுப்பாட்டு மேலாளர் “பில் மெக்அல்பின்” தெரிவித்தார்.
லாக்ஹீட் மார்டின் உருவாக்கியுள்ள ஜுனோ விண்கலம், 20 மாதங்கள் தாக்குபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் இறுதி பாதையில் வலம்வரும் ஜூனோ வியாழனின் கதிரினால் தாக்குண்டு தன்னைத்தானே ஆவியாக்கிக் கொள்ளும்.
அதற்குள் ஜுனோ பல அரிய தகவல்களை நாசா ஆய்வாளர்களுக்கு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.