நியூஸ்பாண்ட்:
“அம்மா”வின் குட்புக்கில் இடம் பிடித்திருந்ததால்தான் அவருக்கு “பவரான” துறை ஒதுக்கப்பட்டது.
இவரது பெயரைக் குறிப்பிட்டு “மேலிடம்” பாராட்ட… மனிதர் ரொம்பவே “கெத்து” காட்ட ஆரம்பித்தார். “அம்மாவே என் பெயரைச் சொல்லி பாராட்டிட்டாங்க” என்று சீனியர்களை உதாசீனப்படுத்த ஆரம்பித்தார்.
விசயம் மேலிடத்துக்குப் போய்விட்டது.
அடுத்து..
சமீபத்தில் ஒரு டி.வி. சேனலுக்கு போன் போட்டவர், “ என்னை ஏன் உங்க டிவியில காட்டறதே இல்லே” என்று எகிறியிருக்கிறார். அந்த சேனலில் அதிபர், மேலிடத்துக்கு நெருக்கமானவர். இவரது எகிறல் குறித்து அவர் மேலிடத்தில் சொல்லிவிட்டார்.

இன்னொரு விவகாரம்…
இவரிடம் யார் கோரிக்கை வைத்தாலும், தனது மகன் அல்லது மருமகனை பார்க்கச் சொல்கிறாராம். அவர்கள் இருவரும்தான் “எல்லாவற்றையும்” முடிவு செய்கிறார்களாம்.
இதுவும் மேலிடத்துக்கு புகாராக போக.. “மேலிடம்” அழைத்து லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டதாம்.
இதனால் “மன்ற தொடர் முடிந்த பிறகு, மாண்புவுக்கு மண்டகப்படிதான்” என்ற பேச்சு கோட்டை வட்டாரத்தில் உலவுகிறது.
“அய்யோ.. அப்படியானால் நான்தான் முதல் விக்கெட்டா” என்று பதறிப்போயிருக்கிறார் மனிதர். பாவம், “பவராக” வலம் வந்தவரின் முகம் இப்போது பியூஸ்போன பல்பாக வாடிக்கிடக்கிறது.
Patrikai.com official YouTube Channel