“முதல் நூறு யூனிட் மின் கட்டணம் இலவசம்” என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஆனால் கட்டணத்துக்கு மேல் மக்களிடமிருந்து மின்வாரியம் வசூலிக்கிறது என்று அதிர்ச்சி தகவலை வெளியிடுகிறார் மூத்த பத்திரிகையாளர் பா. ஏகலைவன். இவரது முகநூல் பதிவு:
“இத மாதம் மின்சாரக் கட்டணம் 4 ஆயிரத்தை தாண்டியிருந்தது. கடந்த கோடையில் குளிரூட்டியைக்கூட அவ்வளவாக பயன்படுத்தவில்லை. என்ன கொடுமையடா என்று உதவி பொறியாளரிடம் மனு கொடுத்திருந்தேன்.
அடுத்த நாளே மின்வாரிய ஊழியர் வந்தார். எலக்டாரினிக் மீட்டரை சோதனை செய்தார். எல்லாமும் சரியாகதான் வந்திருக்கிறது என்றார். போய்விட்டார்.
அது எப்படி ஐயா, இந்த மாதம் மட்டும் இவ்வளவு தொகை எகிறிருக்க முடியும் என்று அந்த துறையில் உள்ள பலரிடம் கேட்டேன். அப்போதுதான் ஒருவர் போனால் போகிறது என்று அந்த உண்மையை சொன்னார்.
“சார் ஒரு விஷயம் சொல்லட்டுங்களா. இந்த டிஜிட்டல் மீட்டரு மக்களுக்கு நஷ்டம். டிபார்ட்மெண்ட்டிற்கு லாபம். இந்த மாதம் மின்கட்டணம் எல்லாருக்கும் கூடதான் வரும். ஏன் என்றால் அதிகப்படியான கோடை காலத்தில் மீட்டர் அதிக சூடாகும். அந்த சூடு டிஜிட்டல் மீட்டரில் காட்டும் எண்ணிக்கையிலும் கூடிக்கொண்டிருக்கும். வழக்கமாக பத்து யூனிட் என்றால் வெளியில் இருக்கும் வெப்பத்தால் 12 யூனிட் என்று கணக்கு காட்டும். அது அப்படித்தான்.
குளிர் காலம் என்றால் வழக்கமாக இருக்கும். பழைய மீட்டர் என்றால் இந்த சிக்கல் இருக்காது.
அப்படியே அதிர்ச்சியில் நின்றுவிட்டேன். மின்வாரிய ‘துரைமாருங்களே..வெய்யில்ல நாங்கதான் வதை படனும்னா, டிஜிட்டல் மீட்டருமா வதை படனும்…?
அடப்பாவிகளா. தமிழகம் முழுதும் எத்தனை கோடிகள்…?
அம்மா, தாயே….100 யூனிட் மின்சாரம் இலவசம் என்பது இருக்கட்டும். முதலில் இந்த டிஜிட்டல் மீட்டர் கொள்ளையை நிறுத்த வழியைப் பாருங்கள் தாயே…!”