சத்தீஸ்கர்: பாஜகவை சேர்ந்த பஞ்சாயத்து உறுப்பினரை மாவோயிஸ்ட்கள் கொலை செய்து தூக்கிலிட்ட சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்திஸ்கர் மாநிலம் பீஜபூர் மாவட்டத்தில் உள்ள சங்கம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராம்சாய் மஜ்ஜி. 64 வயதான இவர் பீஜபூர் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக பொறுப்பு வகித்து வந்தார். அரசு பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியரான இவரது உடல், நேற்று (வெள்ளிக்கிழமை ) இரவு தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

ராம்சாய் மஜ்ஜி வீட்டிற்கு வந்த மாவோயிஸ்ட் குழுவினர் அவரை அழைத்து சென்றதும், பிறகு அவரைக் கொனறு தூக்கில் தொங்கவிட்டதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
“கொலைக்கான காரணம் தெரியவில்லை. கொலையாளிகளை பிடிக்க பாதுகாப்பு படையினர் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்” என்று பீஜபூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel