சில சர்ச்சைகள் முடிவுக்கே வருவதில்லை. அதுபோலத்தான் டைரக்டர் பாலா இயக்கிய “நான் கடவுள்” குறித்த ஒரு விவகாரமும்.
பிச்சைக்காரர்களை வைத்து எடுக்கப்பட்ட அப்படத்தில் , ஒரிஜினல் பிச்சைக்கார்ரகள் பலரையே நடிக்கவைத்தார் பாலா. படப்பிடிப்பு வழக்கம்போல மாதக்கணக்கில் நீண்டது. ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்து படமும் வெளியானது.
அப்போது, “படத்தில் நடித்த பிச்சைக்காரர்களுக்கு நிறைய ஊதியம் தருவதாகச் சொன்ன டைரக்டர் பாலா, அவர்களை ஏமாற்றிவிட்டார்” என்று ஒரு தகவல் பரவியது. இதற்கு பாலா எந்தவித பதிலும் சொல்லவில்லை. அதன் பிறகு அந்த சர்ச்சை அப்படியே அமுங்கியது.
இந்த நிலையில் , படம் வெளியாகி ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் ஏதே சர்ச்சை கிளம்பியது.
திருச்செந்தூர் கோயிலில் பிச்சை எடுத்துவரும் ஒரு பெண்மணி, “டைரக்டர் பாலா அழைத்து, நிறைய சம்பளம் தருவதாக சொன்னதால் “நான் கடவுள்” படத்தில் நடித்தேன். “தொழிலுக்கும்” போகாமல், ஒன்பது மாதங்கள் நடித்தேன். ஆனால் எங்களுக்குத் தருவதாக சொன்ன பணத்தை தரவில்லை” என்று சில நாட்களுக்கு முன் தெரிவித்தார். அவரது பேச்சு, வீடியோவாக சமூகதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த பார்த்திபன் ஜெயராமன் என்பவர், பாலாவிடம் நான் கடவுள் படத்தில் உதவி இயக்குநராக தான் பணியாற்றியதாகவும் அதில் நடித்த பிச்சைக்காரர்களுக்கு எந்தவித சம்பள பாக்கியும் இல்லை என்று முகநூல்லி தெரிவித்துள்ளார்.
அவரது பதிவு:
“ ’நான் கடவுள்’ திரைப்படத்தில் நான் associate director. ஃபோட்டோவில் இயக்குநர் பாலா அவர்களுக்கு பின்னால் நீல வண்ண தாவணி அணிந்து அமர்ந்திருப்பவர் தான் பேட்டி கொடுத்த திருச்செந்தூர் சாந்தி. ’சம்பளம் கொடுக்கவில்லை’ என்பது மிக மிகத் தவறான செய்தி. மாற்றுத்திறனாளிகளுக்கு பேசப்பட்டது தினசரி சம்பளம். அந்த சம்பளம் கொஞ்சம் கூட குறைக்கப்படாமல் அன்றன்று மாலையே வழங்கப்பட்டது. மேனேஜரோ அல்லது கேஷியரோ கொடுத்தால் கூட தவறு நடக்க வாய்ப்புண்டு என்பதால் உதவி இயக்குநர்கள் நாங்கள் தான் பொறுப்பேற்று பணத்தை வாங்கிக் கொடுத்தோம். மாற்றுத்திறனாளிகளுக்கு நிச்சயமாக… ’ஒரு பைசா’ கூட சம்பள பாக்கி கிடையாது. படம் முடிந்த பிறகு ஒவ்வொரு மாற்றுத்திறனாளியின் வங்கிக் கணக்கிலும் ஒரு குறிப்பிட்ட தொகையை fixed deposit-ல் போட்டு அதன் பலனை அவர்கள் பெற வேண்டும் என்பது இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர்களின் விருப்பம். மாற்றுத்திறனாளிகளின் எதிர்பார்ப்பும் அதுதான். ஆனால் இயக்குநருக்கு அந்த நேரம் இருந்த பணப்பிரச்னை காரணமாக அதை செய்ய முடியாமல் போய் விட்டது. அந்த உறுத்தல் எனக்கு இன்று வரை உள்ளது” இவ்வாறு பார்த்திபன் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.