சுவையான வெண்பொங்கல் சாப்பிடும்போது, சற்றே காரமான மிளகை கடித்தால்.. அதுவும் சுவைதான். ஆனால் கல்லை கடித்தால்?
அப்படித்தான் இருக்கிறது நடிகர் &  இயக்குநர் பார்த்திபனின் பேச்சு. வித்தியாசமாக சுவாரஸ்யமாக பேசி அனைவரையும் கவரும் இவர்,  அவ்வப்போது எல்லை மீறி பேசி அனைவரையும் சங்கடப்படுத்திவருகிறார்.1
இன்று நடந்த “தொடரி” ஆடியோ ரிலீஸ் விழாவிலும் அப்பபடித்தான்.
படத்தன் நாயகன் தனுஷை புகழந்தவர், அப்படியே ஹீரோயின் கீர்த்தியையும்  புகழ ஆரம்பித்தார். சரிதான்.. அதோடு விட்டிருக்கலாம்.
“கீர்த்தி  மாதிரி ஆழகான பெண்களை பெற்றெடுக்கும் எல்லா பேரண்ட்ஸூக்கும் ஒரு வேண்டுகோள் .இந்த மாதிரி அழகான பெண்களை பெற்றெடுக்கும்போது ஒரே பிள்ளையோடு நிறுத்தாமல், அரை டஜன்,ஒரு டஜணுண்ணு பெத்துக்குங்க…   அப்பத்தான்  தமிழ் சினிமாவுக்கு கதாநாயகி பஞ்சமே வராது” என்றார்.
இதைக்கேட்டு கீர்த்தியின்  பெற்றோர் சங்கடத்துடன் நெளிந்தார்கள்.
“மகளுக்கு திருமண வயசு ஆச்சு.. இனியாவது தத்துபித்துனு உளறுவதை நிறுத்துவாரா பார்த்திபன்” என்று அரங்கத்தில் பலரும் முணுமுணுத்தனர்.

[youtube-feed feed=1]