nita ambaniஇந்தியத் தொழிலதிபர் அம்பானியின் மனைவி நிடா அம்பானி ஐ.பி.எல் அணியான மும்பை இண்டியன்ஸ் உரிமையாளர்.ரிலையன்ஸ் பவுண்டேசனின் நிறுவனத்தலைவர் ஆவார்.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (IOC) உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்பட பரிந்துரை செய்யபப்ட்டுள்ளார்.
ரியொவில் ஆகஸ்ட் 2-4 தேதிகளில் நடைபெறவுள்ள தேர்தலில் அவர் வெற்றிபெறுவாரேயானால் இந்தியாவிலிருந்து ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராகும்  முதல் பெண்மணி எனும் பெருமையை அவர் பெறுகின்றார்.
சச்சின், சாருக் கான் லியாண்டர் பேஸ் உள்ளிட்ட இந்தியாவின் பிரபலங்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

srk-and-sachinலியாண்டர் பேஸ் தனது செய்தியில், ” இவரை விட சிறந்த பெண்மணியை பரிந்துரைத்திருக்க முடியாது. நிடா அம்பானியை நினைத்து பெருமை படுகின்றேன்” எனக் கூறியுள்ளார்.

சாருக் கான் தனது செய்தியில் ” நிடா அம்பானிக்கு வாழ்த்துக்கள். இனி விளையாட்டு பாமர மக்களையும் சென்றடையும்” எனக் கூறியுள்ளார்.

சானியா மிர்சா தனது செய்தியில், “விளையாட்டினை நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் கொண்டு சேர்க்க நிடா அம்பானி ஆற்றியுள்ள மகத்தான பணிக்கு கிடைத்துள்ள வெகுமதி” எனக் கூறியுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் தனது செய்தியில் “நிடா அம்பானியின் விளையாட்டின் மீதான ஈடுபாடு போற்றத்தக்கது. அவரது இந்த தேர்வு இந்தியாவிட்ற்கு பெருமை. பெண்கள் சமத்துவத்திற்கும் கிடைத்த வெற்றி” எனக் கூறியுள்ளார்.

பல்வேறு விளையாட்டுகளுக்கு ஸ்பான்சர் செய்யும் ரிலையன்ஸ் கம்பெனியின் உரிமையாளருக்கு பிரபலங்கள் வாழ்த்து சொல்வதில் வியப்பில்லை.
எனினும், அவரது இந்த நியமனப் பரிந்துரை பல்வேறு விமர்சனங்களையும் பெற்றுள்ளது.
ராகுல் பெர்னாண்டஸ், இந்த நியமனத்தின் மூலம் நிடா அம்பானி 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியின் பெயரை ஜியோ ஒலிம்பி என மாற்றிவிடுவார்” என கூறியுள்ளார்.
சண்ட்-ட்-சிங் ” விரைவில் ரோஹித் டஷர்மா மற்றும் ஹர்பஜன் சிங் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்துகொள்வார்கள்” எனக் கூறியுள்ளார்.
ஷுபாங்கி பாட்டில் எனும் பெண் ” அஞ்சும் சோப்ரா போன்ற விளையாட்டு வீரர்களுக்கு வாஐப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
கிரேட் போங்க் எனும் பதிவர் , ” உலகில் இருவகையான மனிதர்கள் :அம்பானியை சேர்ந்தவர்கள்.. அம்பானியைச் சேராதவர்கள்( நிடா அம்பானி.. நாட் ய அம்பானி )
குர்ராம் ஹபிப் எனும் பதிவர், “இனி ரிலையன்ஸ், ஒல்ய்ம்பிக் போட்டிகளுக்கு நிதியுதவி அளிக்கும்” எனக் கூறியுள்ளார்.
நிடா அம்பானி எந்த விளையாட்டிலும் ஈடுபட்டதில்லை. அவருக்கு விளையாட்டு குறித்த எந்த பின்புலமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் ஒலிம்பிக்  போட்டிகளுக்கு முன்மொழியப்பட்டுள்ளது பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது. கார்ப்பரேட் கம்பெனிகள் அரசுகளை மட்டுமல்ல  விளையாட்டையும் தீர்மானிக்கும் சக்திகளாக வுள்ளனர் என்பதற்கு நிடா அம்பானி ஒரு உதாரணம்.