சம்பளத்திற்கு பணியமர்த்தப்பட்ட ஓட்டுனர்கள் தான் பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணம் சமீபத்திய அரசாங்கத்தின் புள்ளிவிவர படி, தமிழ்நாட்டில் சம்பளத்திற்கு பணியமர்த்தப்பட்ட ஓட்டுனர்கள் தான் அதிகளவு விபத்துக்கள் ஏற்படுத்துகிறார்கள். சாலை போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், 2015 இல் கிட்டத்தட்ட 2,400 பேரின் மரணத்திற்கு தமிழ்நாடு மாநிலத்தில் பணியமர்த்தப்பட்ட ஓட்டுனர்கள் காரணமாக இருந்துள்ளனர்.
வாகனங்கள்மீது பொறுப்பில்லாததினால் கூடப் பணியமர்த்தப்பட்ட ஓட்டுனர்கள் பெரிய அளவில் விபத்துக்கள் ஏற்படுத்தும் காரணமாக இருக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கூற்றுப் படி, நகரம் விரிவடைந்து வருகிறதால், வாடகை வண்டிகளின் தேவை அதிகரித்து வருகிறது மற்றும் அதன் விளைவாக விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. ஐ.டி துறைக்காக இயங்கும் வாடகை வண்டிகள் மிகப்பெரிய குற்றவாளிகள் ஒன்று, என்று அவர்கள் சொல்கிறார்கள்.
“ஒவ்வொரு இரவும் அவர்கள் எத்தனை மணி நேரம் வாகனம் ஓட்டுகிறார்கள் என்பதை கண்காணிக்க எந்தச் செயல்முறையும் இதுவரை இல்லை. அதிக பணம் சம்பாதிக்கும் பொருட்டு, அவர்கள் தங்கள் பொறுமை நிலையைத் தாண்டி வாகனம் ஓட்டி விபத்துக்களை ஏற்படுத்துகின்றனர்,” என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார். “அவர்களில் பலர் நகரத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை ஆகையால் அவர்கள் தப்பித்துவிடுகின்றனர். அவர்கள் ஒரு விபத்தை ஏற்படுத்தினால் , உடனே சில வாரங்களுக்குத் தமது கிராமங்களுக்குச் சென்று விட்டு மீண்டும் நகரத்திற்கு திரும்பி வருகின்றனர். இந்த ஓட்டுனர்களைத் தண்டிக்க வழியே இல்லை. ”
பல விபத்துக்கள் ஏற்படுத்தும் பணியமர்த்தப்பட்ட மற்ற ஓட்டுனர்கள் மத்தியில் நகரத்திற்கு பொருட்களை கொண்டு செல்லும் லாரி ஓட்டுனர்கள் தான் அதிகம் உள்ளனர். இந்த கனரக வாகனங்கள் முன்பை விட இப்போது மிகவும் சுதந்திரமாக நகருக்குள் நுழைவதாக போக்குவரத்து பணியாளர்கள் கூறுகின்றனர். நகர விதிகளின் படி, அவர்கள் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி இடையே மட்டும் தான் நகரத்திற்குள் நுழைய முடியும்.
உரிமம் இல்லாத ஓட்டுனர்கள் மூலம் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையில் 636 எண்ணிக்கையோடு தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் இருக்கிறது. உத்தரப் பிரதேசம் 1,544 மக்கள் உயிரிழந்தனர் என்று பட்டியலில் முதல் இடத்திலும், அதனைத் தொடர்ந்து 954 மக்களோடு ஆந்திரப் பிரதேசம் இரண்டாம் இடத்திலும் உள்ளது.