assembly_2560621h
புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்வரை தேர்ந்தெடுக்க, காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூடியுள்ளது.
நடந்து முடிந்த புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வென்றது. அதையடுத்து அக் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. தற்போது அம் மாநில (யூனியன் பிரதேசம்) முதல்வர் போட்டியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாராயணசாமி, நமசிவாயம், வைத்தியலிங்கம் ஆகியோர் உள்ளனர்.
இந்த நிலையில் இன்று அம் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூடியுள்ளது. இதில் காங்கிரஸ் அகில இந்திய தலைவர்கள் முகுல் வாஸ்னிக் மற்றும் ஷீலா தீக்க்ஷித் பங்கேற்கின்றனர். இன்று மாலைக்குள் புதுவை முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.