தமிழக அரசு முதற்கட்டமாக 500 ‘டாஸ்மாக்’ கடைகள் மூடப்படும் என்று அறிவித்துள்ள நிலையில், மூடப்படும் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 700- ஆக உயர்த்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது.
“மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வரப்படும்” என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா அறிவித்தார். அதே போல தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்றதும், முதற்கட்டமாக ஐநூறு டாஸ்மாக் மதுக்கடைகளை மூடும் உத்தரவில் கையெழுத்திட்டார்.
இதையடுத்து மூடப்பட வேண்டிய கடைகள் குறித்து, டாஸ்மாக் அதிகாரிகள் கணக்கெடுத்தனர். அதன்பதி 525 கடைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்பட்டது.
இந்த நிலைில், “மூடப்படும் டாஸ்மாக் கடைகள் பட்டியலில், எங்கள் பகுகியில் இருக்கும் டாஸ்மாக் கடைகளையும் சேருங்கள்” என்று கோரி, தமிழகம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவருகிறார்கள்.
இது குறித்த கோரிக்கை மனுக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து ஏற்கெனவே அறிவிக்கப்படதைவிட கூடுதலாக இருநூறு மதுக்கடைகள மூட அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் வட்டாரம் தெரிவிப்பதாவது:
“அரசு அறிவித்தபடி 500 கடைகளை மூடவே அதிகாரிகள் கணக்கெடுப்பில் இறங்கினார்கள். மொத்தம் 525 கடைகளை கண்டறிந்தார்கள். போதிய அளவு விற்பனை இல்லாத கடைகள், அருகருகே உள்ள கடைகள் போன்றவையே பெரும்பாலும் இந்த பட்டியலில் இருந்தன.
இந்த நிலையில் மக்கள் தாங்களாகவே தங்கள் பகுதியில் உள்ள மதுக்கடைகளை எடுக்கக்கோரி மனு அனுப்பி வருகிறார்கள். இது மேலிடத்தின் கவனத்துக்குச் சென்றது. இதையடுத்து 500க்கு பதிலாக 700 மதுக்கடைகளை மூட, பட்டியல் தயாரிக்கும்படி கூறியிருக்கிறார்கள்” என்று அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.