வாஷிங்டன்:
மெரிக்க அதிபர் ஒபாமா, பறக்கும் தட்டு குறித்த உண்மையை வெளிப்படுத்த இருப்பதாக அந்நாட்டில் தகவல் பரவி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீண்ட காலமாகவே, பறக்கும் தட்டுகள் குறித்த பல்வேறு செய்திகள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. வேற்று கிரகத்து மனிதர்கள் பூமிக்கு வந்து செல்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் எந்த செய்தியும் உறுதிப்படுத்தப்படவில்லை.
download (3)
இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் தான்  அமெரிக்காவின் ஜனாதிபதியானால் பறக்கும் தட்டு குறித்த உண்மையை வெளிப்படுத்துவேன் என கூறி சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்,
அமெரிக்காவில் கடந்த 1950 ஆம் ஆண்டு முதலே பறக்குத் தட்டு குறித்த புகைப்படங்கள், அறிக்கைகள் தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.  “ஏரியா 51 க்கு பின்னால்”  (Behind Area 51)  என்பதும் அதில் ஒரு ஆராய்ச்சி ஆகும். இது பற்றிய விவரங்களைத்தான் வெளியிடப்போவதாக ஹிலாரி அறிவித்தார்.
obama-flying-saucer-2
இந்த நிலையில், பறக்கும் தட்டு குறித்த உண்மையை தற்போதைய அதிபர் ஒபாமாவே, வெளிப்படுத்த இருப்பதாக  அமெரிக்காவில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து அமெரிக்காவில் செயல்பட்டு வரும் உரு மாதிரி ஆராய்ச்சி குழு (Paradigm Research Group)  என்ற அமைப்பின் நிர்வாக இயக்குனர் ஸ்டீபன் பஸ்செட் கூறும் போது, “பறக்கும் தட்டுகுறித்த உண்மை வெளியானால், உலக அளவில் கவனத்தை ஈர்க்கும் முக்கிய செய்தியாக அது இருக்கும். உலகம் முழுதுமுள்ள தொலைக்காட்சி, செய்தித்தாள்களில் இடம் பிடிக்கும் செய்தியாக அது இருக்கும்” என்றார்.
.