அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்புக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப், தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாட்டைச் சேர்நதவர்களுக்கு எதிராகவும் அவர் பேசியது ஏற்கெனவே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நியூ மெக்சிகோவில் ஒரு அரங்கில் டிரம்ப் பிரச்சாரம் நடத்தத் திட்டமிட்டு இருந்தார். டிரம்ப்பின் கருத்துக்களுக்கு எதிரான கருத்துடைய பொதுமக்கள் அங்கு கூடினர். அவர்கள், டிரம்ப்புக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அவர்களை கலைக்க முயன்ற காவல்துறையினர மீது கற்களால் தாக்கினர். இதனால் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளைப் பயன்படுத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர்.