9–வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கடைசி நான்கு போட்டிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேற முக்கியமானது.
இந்த போட்டிகள் கடந்த சனி அன்று நடை பெற்றன. மும்பை இந்தியன்ஸ் – குஜராத் லியோன்ஸ் மற்றும், புனே சூப்பர் கியான்த்ஸ் – கிங்க்ஸ் XI பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு இடைய இந்த போட்டிகள் நடைபெற்றன.
462883-ms-dhoni-afp-puneபுனே சூப்பர் கியான்த்ஸ் – கிங்க்ஸ் XI பஞ்சாப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பட்டிங்கை தேர்வு செய்தது. இந்த அணி 20 ஓவர்களின் 172 ரன்கள் எடுத்தது. விஜய் மற்றும் குர்கீர்த் சிங் அரைசதம் அடித்தனர். புனே அணி சார்பாக பந்துவீசிய அஷ்வின் 4 விக்கெட்கள் எடுத்தார். 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு பெற களம் இறங்கிய புனே அணி, போராட்டகரமான ஆட்டத்தில் டோனி கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றி பெற செய்தார். டோனி 64 ரன்கள் எடுத்து அட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
7709f7c8c27b637d93762cf23d8071b1-1460807822-800மும்பை இந்தியன்ஸ் – குஜராத் லியோன்ஸ் இடையேயான இன்னொரு போட்டியில், போட்டியில் டோஸ் வென்ற குஜராத் அணி மும்பை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. மும்பை அணி 20 ஓவர்களில் 172 ரன்கள் எடுத்தது. ரண, 36 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார். அடுத்து ஆடிய குஜராத் அணியின் ரைனா மற்றும் மெக்கல்லம் ஜோடி அதிரடியாக ஆடி வெற்றிக்கு வழிவகுத்தது.இறுதில் ஸ்மித் மற்றும் ஜடேஜா ஆகியோரின் அதிரடி ஆட்டம் மூலம் குஜராத் அணி 6 விக்கெட் வியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் குஜராத் அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.
iplpathankkநேற்று நடைந்த இரு போட்டிகளும் முக்கியமானவை இவற்றில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே அடுத்த சுற்றுக்கு செல்லமுடியும். முதல் போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ்– ஐதராபாத் சன் ரைசர்ஸ் இடையே கொல்கத்தாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, கொல்கத்தா அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. பதான் மற்றும் பண்டே ஆகியோர் அதிரடியாக ஆடினர். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி. 171 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஹைதராபாத் அணி ஆட வந்தது. அந்த அணியின் கேப்டன் வார்நேர் அவுட் ஆகவே, ஹைதராபாத் அணி சற்றே பின்தங்கியது. தவன் ஒருபுரம் ஆட. மறு முனையில் விக்கெட்கள் விழுந்துகொண்டே இருந்தது. இறுதியில் ஹைதராபாத் அணி 22 ரன்கள் வித்யாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றி மூலம் கொல்கத்தா அணி, அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. ஹைதராபாத் அடுத்த சுற்றுக்கு செல்ல டெல்லி டேர்டெவில்ஸ்– பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆட்டம் முக்கிமானதாக கருதப்படுகிறது.
647_052316121255டெல்லி டேர்டெவில்ஸ்– பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆட்டம் ஐ.பி.எல். 2016 தகுதி சூற்றுக்கான கடை போட்டியாகும். மேலும் அடுத்த சுற்றுக்கு செல்ல இரு அணிகளும் கடுமையாக போராட வேண்டியிருந்தது.
டாஸ் வென்ற பெங்களூர் அணி டெல்லி அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. டி கோக் 60 ரன்கள் மூலம் டெல்லி அணி 20 ஓவர்கள் மூடிய 138 ரன்கள் எடுத்தது. அடுத்த சுற்றுக்கு செல்ல பெங்களூர் வெற்றி பெற வேண்டிய சூழல் இருந்தது. கொஹில் மற்றும் ராகுல் பொறுமையுடன் விளையடி பெங்களூர் அணியை 18 ஓவர்களில் வெற்றி பெற செய்தனர்.
FotorCreated
IMG-20160523-WA0198இதன் மூலம் அடுத்த சூற்றுக்கு குஜராத், பெங்களூர், ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் முன்னேறினர்.