கபாலி படத்தின் உள் விவகாரங்கள்.. அதாங்க, படத்தைப் பற்றிய விசயங்கள் கொஞ்சம் கொஞ்மாக கசிய ஆரம்பித்திருக்கின்றன.
அவற்றில் சில..
‘கபாலி”யின் கதைக்களம் மலேசியா. ஆனால் அங்கு சில காட்சிகள்தான் படமாக்கப்பட்டன. ஏனென்றால் அவுட்டோரில் படமாக்கப்படும்போது பல விசயங்கள் கசிந்துவிடுகின்றன என்பதால்தான்.
ஆகவே சென்னையில் இருக்கும் மோகன் ஸ்டுடியோவில் மலேசியா, பாங்காக் போல செட் போடப்பட்டு படமாக்கப்பட்டன.
இங்குதான் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டன.
படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்த பிறகு, சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் ஃபோர்பிரேம் தியேட்டரில் டப்பிங் நடந்தது. ரஜினி நான்கு நாட்கள் கலந்து கொண்டார். தினசரி காலை ஏழு மணி முதல் மதியம் ஒரு மணிவரை முடித்துவிட்டு போயஸ்கார்டன் சென்று வீட்டில் உணவு சாப்பிட்டு ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் மாலை நான்கு மணிக்கு வந்து இரவு ஒன்பது மணிவரை டப்பிங் பேசினார் ரஜினி.
டப்பிங் இடையே தனக்கு பிடித்த மல்லி காபியை அவ்வப்போது அருந்தினார்.
இந்தப்படத்தில் மலேசிய டான் வேடத்தில் நடிக்கிறார் சீன நடிகர் வின்ஸ்டன். படத்தில் பெரும்பாலும் அவர் சீன மொழியிலேயே பேசுகிறார். படத்தில் சீன மொழியோடு, மலாய் மொழி, தாய்லாந்தில் பேசப்படும் ‘தாய்’ மொழி என்று பல மொழிகளிலும் வசனங்கள் இடம்பெறுகின்றன.
‘கபாலி” தமிழ்ப்பதிப்பின் வேலைகள் முடிந்து விட்டன. தற்போது தெலுங்கில் டப்பிங் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் ரஜினிக்காக வசனம் பேசுபவர், பாடகர் மனோ.
‘மலாய் மொழியிலும் ‘கபாலி” டப்பிங் செய்யப்படுகிறது. அந்த மொழியில் டப்பிங் செய்யப்படும் முதல் தமிழ்த்திரைப்படம் இதுதான்.
மலேசியாவில தோட்டத்தொழிலாளர்களாக இருக்கும் தமிழர்கள் மிகவும் துன்புறுத்தப்படுகிறார்கள். அவர்களுக்காக போராடுகிறார் ரஜினி. ஆகவே அவரை சிறையில் அடைககிறது மலேசிய அரசு. சிறையில் இருந்துகொண்டே தனது போராட்டத்தில் ரஜினி வெற்றி பெறுகிறார். இதுதான் கதை என்கிறார்கள்.