egipt

லைப்பைப் பார்த்தவுடனே, வெளிநாட்டு நடிகைன்னு முடிவு பண்ணியிருப்பீங்க. அதுவும் மேற்கத்திய நடிகை யாராவது இப்படி பேசுயிருப்பாங்கன்னுதான் நினைப்பீங்க.

பாதி சரி. ஆமாம்..வெளிநாட்டு நடிகைதான். ஆனா இந்தியா மாதிரியே செக்ஸூவல் விசயங்கள்ல கட்டுப்பாடோட இருக்கிற.. அல்லது இருக்கிற மாதிரி பாவனை செய்யற நாடு எகிப்து.

அங்கே  ஆபாச இணைய தளங்களையும் தொலைக்காட்சிகளையும் தடைசெய்ய நடவடிக்கை எடுக்க ஆரம்பிச்சிருக்கு அந்த நாட்டு அரசு. இதை எதிர்த்து அந்த நாட்டு நடிகை  என்டிஸ்ஸார் கருத்து தெரிவித்தார். இவர் டிவி தொகுப்பாளினியும்கூட.

சரி, அவர் என்ன சொன்னார்?

”திருமண செலவு அதிகரிச்சிகிட்டே போகுது. அதனால பல இளைஞர்கள் திருமணம் முடியாம கஷ்டப்படுறாங்க. அவங்களுக்கு ஆறுதலா இருக்கிறது  ஆபாச இணையதளங்கள்தான். அவற்றை தடை செய்யக்கூடாது” என்று சொன்னார்.

போதாதா..   இங்க மாதிரியே அங்க இருக்கிற கலாச்சாரகாவலர்கள், நடிகையை உண்டு இல்லேன்னு ஆக்கிட்டாங்க.  “எகிப்து பாரம்பரியத்தையே கேவலப்டுத்திட்டார்.. உடனே மன்னிப்பு கேக்கணும்”னு கூக்குரல் இட ஆரம்பிச்சிட்டாங்க.

அந்த நாட்டு அரசின் தலைமை வழக்குரைஞரும் அதே போல சொல்ல..  கூறியிருக்கிறார்.

அதனால் அந்த நடிகை இப்போயி கிடக்காங்க… அரசை எதிர்க்கிறதுன்னா சும்மாவா?