
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு அதே இடத்தில் நீடிப்பதாகவும், தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் கனமழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சடையாம்பட்டு, சிறுவாங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் பரவலாக மழை பெய்தது. வால்பாறையை அடுத்த பச்சைமலை எஸ்டேட், குரங்குமுடி எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கரையோர பகுதிகளுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில், புதிய துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
இந்த நிலையில், வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு அதே இடத்தில் நீடிப்பதாகவும், தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் கனமழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel